AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Raashi Khanna: தர்மன் படத்தில் நடிக்க ஓகே சொன்னதற்கு காரணம் இதுதான் – ராஷி கண்ணா!

Raashi Khanna About Dharman Movie: தென்னிந்திய மொழிகளில் சிறந்த நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் ராஷி கண்ணா. இவர் தற்போது தமிழில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், தர்மன் படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் நடிப்பதற்கு ஓகே சொன்ன காரணம் பற்றி ராஷி கண்ணா வெளிப்படையாக பேசியுள்ளார்.

Raashi Khanna: தர்மன் படத்தில் நடிக்க ஓகே சொன்னதற்கு காரணம் இதுதான் – ராஷி கண்ணா!
தர்மன் படம் பற்றி ராஷி கண்ணாImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 07 Aug 2026 11:45 AM IST

தமிழ் சினிமாவில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும், அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருப்பவர் ராஷி கண்ணா (Raashi Khanna). இவர் தமிழில் அதர்வா (Atharvaa) மற்றும் நயன்தாரா (Nayanthara) இணைந்து நடித்திருந்த இமைக்கா நொடிகள் (Imaikkaa Nodigal) என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பின் தமிழில் இவருக்கு தொடர்ந்து புது படங்கள் உருவாகிவந்தது. இவர் தனுஷ் முதல் ரவி மோகன் வரை பல்வேறு நடிகர்களுடன் படங்களில் இணைந்து நடித்துள்ளார். இறுதியாக இவரின் நடிப்பில் தமிழில் அகதியா என்ற படம் வெளியானது. நடிகர் ஜீவா இப்படத்தில் லீட் நாயகனாக நடித்திருந்த நிலையில், அதில் அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்திருந்தார். இப்படத்திற்கு பின் தமிழில் இவர் இணைந்துள்ள புது படம்தான் தர்மன் (Dharman).

இதை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து (Ashwath Marimuthu) இயக்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லீட் நாயகனாக நடித்துவருகிறார். அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய ராஷி கண்ணா, தர்மன் படத்தில் தனது கதாபாத்திரம் மற்றும் இப்படத்தில் நடிப்பதற்கான காரணம் குறித்து அவர் பேசியிருக்கிறார்.

இதையும் படிங்க: சிலம்பரசன் – அஸ்வத் மாரிமுத்துவின் STR51 பட நிலை என்ன? – தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அப்டேட்!

தர்மன் திரைப்படம் குறித்து நடிகை ராஷி கண்ணா பேசிய விஷயம்:

அந்த நேர்காணலில் பேசிய ராஷி கண்ணா, “தர்மன் படத்தில் எனது கதாபாத்திரம் கதையின் உணர்வுப்பூர்வமான மையமாக இருந்து, தர்மன் என்ற மனிதனை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அஸ்வத் இந்த கதையை எனக்கு கூறியபோது, ​​அது உடனடியாகப் பிடித்துவிட்டது. அதில் மிகுந்த உணர்வு இருந்தது. மேலும் ரஜினிகாந்த் சாருடன் திரையைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு, நான் எளிதாக “ஓகே” என்று சொல்ல வைத்தது.

இதையும் படிங்க: விஷாலின் மகுடம் படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்.. சென்சார் அப்டேட் இதோ!

ரஜினி சாரின் திரைப் பிரசன்னம் மட்டும் என்னைக் கவரவில்லை, அவருடைய பணிவும் ஆர்வமும் கூட. அவர் சொன்ன ஒரு விஷயம் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. நடிகர்கள் கைதிகள் என்று அவர் குறிப்பிட்டார். அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை நான் புரிந்துகொண்டேன். புகழின் விலை என்பது ஒரு குறிப்பிட்ட சுதந்திர இழப்புதான்” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.

தர்மன் திரைப்படம் குறித்து நடிகை ராஷி கண்ணா பேசியது தொடர்பான எக்ஸ் பதிவு:

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, ரஜினிகாந்தின் தர்மன் படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துவருகிறார். இதில் சிம்ரன் மற்றும் ராஷி கண்ணா போன்ற பிரபலங்களும் இணைந்து நடித்துவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், 2027ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறது.

Follow Us