AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சூப்பர் ஸ்டார் கொடுத்த ஆன்மிக புத்தகம்.. நெகிழ்ச்சியாக வீடியோவை பகிர்ந்த நடிகை ராஷி கண்ணா!

Raashii Khanna on Rajinikanth: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நாயகியாக இருந்துவருபவர் ராஷி கண்ணா. இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் தர்மன் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில், சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த ஆன்மிக புத்தகம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் கொடுத்த ஆன்மிக புத்தகம்.. நெகிழ்ச்சியாக வீடியோவை பகிர்ந்த நடிகை ராஷி கண்ணா!
ரஜினிகாந்த் அண்ட் ராஷி கண்ணா Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 01 Aug 2026 16:15 PM IST

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் நாயகியாக நடித்து அசதிவருபவர் ராஷி கண்ணா (Raashii Khanna). இவர் தமிழ் சினிமாவில், அதர்வா (Atharvaa) மற்றும் நயன்தாரா (Nayanthara) நடித்திருந்த “இமைக்கா நொடிகள்| என்ற திரைப்படத்தின் மூலமாக மிகவும் பிரபலமானார். இந்த படத்திற்கு பின் ரவி மோகன் மற்றும் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) என பல்வேறு பிரபலன்களுடனும் இணைந்து நடித்துள்ள. இறுதியாக ஜீவாவுக்கு ஜோடியாக அகதியா (Agathiya) என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்து ரசியக்கர்களை கவர்ந்தார். இந்நிலையில், தற்போது தமிழில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து (Ashwath Marimuthu) இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Superstar Rajinikanth) தர்மன் (Dharman) திரைப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துவருகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கியுள்ள நிலையில், ரஜினிகாந்த் மற்றும் ராஷி கண்ணா ஆகியோரின் ஷூட்டிங் நடைபெற்றுவருகிறது. அண்மையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ராஷி கண்ணா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கு பரிசாக கொடுத்த ஆன்மிக புத்தகம் குறித்து அவர் அதில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: உண்மையிலே ஒரு வரலாற்று தருணம்.. பொறுப்புகளும் அதிகமாக இருக்கு – முதல்வர் விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்!

ரஜினிகாந்க் பரிசாக கொடுத்த ஆன்மிக புத்தகம் குறித்து ராஷி கண்ணா பேசிய விஷயம்:

அந்த இன்ஸ்டாகிராம் வீடியோவில் பேசிய ராஷி கண்ணா, ” தர்மன் படத்தின் ஷூட்டிங்கின்போது, ரஜினிகாந்துடன் அதிகம் உரையாடும் வாய்ப்பு கிடைத்ததாகவும், அப்போது அவர் தனத்துக்கு ஆன்மிகம் தொடரான புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.. மேலும் ரஜினிகாந்தின் வலிமை, அன்பான அணுகுமுறை தன்னை கவர்ந்ததாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க: என் அப்பாகிட்ட யுவன் சாருக்கு போட்டோ அனுப்ப சொல்லுவேன் – ஜேசன் சஞ்சய் சொன்ன விசயம் சுவாரஸ்ய சம்பவம்

மேலும் தனக்கு அவர் பரிசாக வழங்கிய ஆன்மிக புத்தகம், நல்ல மாற்றத்தையும் நேர்மறை எண்ணங்களையும் தனக்கு வழங்கியதாக” நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தற்போது அவர் வெளியிட்ட பதிவு இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுவருகிறது.

ரஜினிகாந்த் பரிசாக கொடுத்த புத்தகம் பற்றி ராஷி கண்ணா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Raashii Khanna (@raashiikhanna)

ராஷி கண்ணா தர்மன் படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நடித்துவருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. நடிகை சிம்ரன் ரஜினியின் மனைவியாக நடிக்கிறாராம். தர்மன் திரைப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், 2026ம் ஆண்டு இறுதிக்குள் ஷூட்டிங்கை படக்குழு திட்டமிட்டுவருகிறதாம். இந்த படத்தில் இதுவரை எந்த படங்களிலும் நடித்திடாத மருத்துவராக நடிக்கிறாராம். இப்படத்தை 2027ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us