இன்னும் அந்தச் சம்பவத்திலிருந்து மீளவில்லை – ஜன நாயகன் பட எடிட்டர் எமோஷனல் பேச்சு!
Editor Pradeep Raghav About Jana Nayagan Leak: முதல்வரும், முன்னாள் நடிகருமான தளபதி விஜய் சினிமாவில் இறுதியாக நடித்திருந்த படம் ஜன நாயகன். இப்படம் வெளியீட்டிற்கு ,முன்னே இணையத்தில் லீக்காகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இப்படத்தின் எடிட்டர் பிரதீப் இ ராகவ் தன்னால் மறக்கமுடியாத சம்பவம் குறித்து எமோஷனலாக பேகிர்ந்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் விஜய் (CM Vijay) சினிமாவில் இறுதியாக நடித்திருந்த திரைப்படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படமானது பான் இந்திய மொழிகளில் கடந்த 2026ம் ஆண்டு ஜூலை 23ம் தேதியில் உருவாகியுள்ளது. இந்த படத்தை இயக்குநர் எச்.வினோத் (H Vinoth) இயக்க, கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணா (Venkat K Narayana) தயாரித்திருந்தார். தமிழக முதல்வர் விஜய், கடந்த 2025ம் ஆண்டு மே மாதத்திற்கு பின் முழுமையாக அரசியலில் இறங்கிவிட்டார். அதற்கு முன்னே ஜன நாயகன் படத்தை தனது கடைசி திரைப்படமாக அறிவித்திருந்தார். இந்த படத்தின் ஷூட்டிங் 2024ம் ஆண்டு இறுதியிலே தொடங்கிய நிலையில், கிட்டத்தட்ட 6 மாதத்திலே ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துவிட்டது. இப்படம் கடந்த 20126ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இணையத்தில் லீக்காகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதில் இப்படத்தின் எடிட்டர் பிரதீப் இ ராகவ்வின் (Pradeep E Raghav) பெயர் பெரிதும் அடிபட்டது. ஆனால் இணையத்தில் லீக்கான வழக்கில் அவர் பக்கத்திலிருந்து எந்த தவறும் இல்லை என தெரியவந்தது. அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய எடிட்டர் பிரதீப் இ ராகவ், ஜன நாயகன் பட லீக்கான சமயத்தில் தான் பட்ட கஷ்ட குறித்து பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: தர்மன் படத்தில் சிம்ரன் மேம் இணைந்தது இப்படிதான்- இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து!
ஜன நாயகன் பட லீக் குறித்து தனக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் பற்றி எடிட்டர் பிரதீப் இ ராகவ் பேச்சு:
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய எடிட்டர் பிரதீப் இ ராகவ், “அந்தச் சம்பவத்திலிருந்து நான் இன்னும் மீளவில்லை. போர் எறும்புகள் இருக்கின்றன, அவை விலங்குகளைக் கூட கொன்றுவிடும். நான் அந்தச் சம்பவத்தை அப்படித்தான் பார்க்கிறேன். படத்தை கசியவிட்டவர்கள் சிறையில் இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: அது ஒரு முன்னோட்டம் மட்டுமே.. ரஜினியுடன் தர்மன் படத்தில் நடிப்பது குறித்து பகிர்ந்த நடிகை சிம்ரன்!
ஆனால் திருட்டுத்தனமாகப் பார்த்தவர்களைக் கண்டுபிடித்துத் தண்டிக்க எந்தச் சட்டமும் இல்லை. அது அவர்களுடைய சொந்த விஷயமாக இருந்தால், அவர்கள் இதைச் செய்ய மாட்டார்கள். பணத்தை விட, ஆயிரக்கணக்கான மக்களும் பணமும் இதில் சம்பந்தப்பட்டுள்ளன” என அதில் எமோஷனலாக அவர் பகிர்ந்துள்ளார்.
ஜன நாயகன் படம் குறித்து எடிட்டர் பிரதீப் இ ராகவ் பேசியது தொடர்பாக வைரலாகும் வீடியோ:
Editor #PradeepERagav‘s emotional note about #JanaNayagan leak !!
“I’m still didn’t got over from the incident. There are war Ants, those will kill even the Animal. I see the incident like that. Those who leaked are in jail & there is no law to find and punish the people who…
— AmuthaBharathi (@CinemaWithAB) July 30, 2026
ஜன நாயகன் படமானது பல தடைகளுக்கு பின், கடந்த 2026ம் ஆண்டு ஜூலை 23ம் தேதியில் உலகமெங்கும் வெளியானது. இந்த படமானது திரையரங்குகளில் சிறப்பாக் வரவேற்பை பெற்றுவரும் நிலையில், 2வது வாரத்தை கடந்தும் வெற்றிநடைபோட்டுவருகிறது. இதுவரை இப்படமானது சுமார் ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.