யோகலட்சுமியின் அலப்பறைகள்.. BTS வீடியோவை பகிர்ந்த அபிஷன் ஜீவிந்தின் படக்குழு!
Yogalakshmis New Film BTS: சினிமாவில் இளம் நாயகியாக படங்களில் நடித்துவருபவர் யோகலட்சுமி. ஹார்ட் பீட் என்ற வெப் தொடரன் மூலம் பிரபலமான இவர், தற்போது சினிமாவில் லீட் நாயகியாக நடிக தொடங்கிவிட்டார். தற்போது இவர் அபிஷன் ஜீவிந்திற்கு ஜோடியாக புது படம் ஒன்றில் நடித்துவரும் நிலையில், அந்த படக்குழு அவரை BTS காமெடி வீடியோவை பகிர்ந்துள்ளது.
கோலிவுட் சினிமா மக்கள் மத்தியில் டூரிஸ்ட் பேமிலி (Tourist Family) என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை யோகலட்சுமி (Yogalakshmi). இவர் இந்த படத்தில் நடிப்பதற்கு முன், ஹார்ட் பீட் (Heart Beat Web Series) என்ற வெப் தொடரில் முக்கியமான வேடத்தில் நடித்துவந்த. 2 சீசன்களாக அந்த வெப் சீரிஸில் நடித்துவந்த யோக லட்சுமி, 3வது சீசனுக்கு பின் விலகிவிட்டார். தற்போது சினிமாவில் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டிவருகிறார். இவர் 2025ம் ஆண்டில் வெளியான டூரிஸ்ட் பேமிலி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டார். இந்த படத்திற்கு பின் சிலம்பரசனின் (Silambarasan) அரசன் (Arasan) திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துவருகிறாராம்.
மேலும் இவர் டூரிஸ்ட் பேமிலி பட இயக்குநரும், நடிகருமான அபிஷன் ஜீவிந்த்துக்கு (Abishan Jeevinth) ஜோடியாக புது திரைப்படம் ஒன்றில் நாயகியாக நடித்துவருகிறார். இப்படத்திற்கு எந்த டைட்டிலும் வைக்கப்படவில்லை. தற்போது இப்படத்தின் ஷூட்டிங்கில் யோகலட்சுமி செய்த அலப்பறைகள் குறித்த BTS வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: தனுஷ் உடன் அடுத்து கூட்டணி சேர்வது எப்போது? வெங்கி அட்லூரி ஓபன் டாக்
நடிகை யோகலட்சுமி குறித்து படக்குழு வெளியிட்ட BTS வீடியோ குறித்த எக்ஸ் பதிவு:
Yogalakshmi’s Cuteness Lights Up the Set | Dr Shivarajkumar X Abishan Jeevinth#DramaCompanyProductionNo1 — Shoot in Progress 🎬
Starring @NimmaShivanna @Abishanjeevinth @shivani_nagaram @iamyogalakshmi_ #GanaVinoth
Produced by @balaarunachala @DramaCompany
Written &… pic.twitter.com/GUpTzOuvpP
— Drama Company (@dramacompany) July 30, 2026
அறிமுக இயக்குநர் கௌதம் சிவராமன் இயக்கத்தில், அபிஷன் ஜீவிந்த் மற்றும் யோகலட்சுமி இணைந்து புது படம் ஒன்றில் நடித்துவருகிறார்கள். இந்த திரைப்படத்தில் அவர்களுடன் கன்னட நடிகர் சிவராஜ்குமார் இணைந்து நடித்துவருகிறார். இவர் இந்த திரைப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துவருகிறார். இவர்களுடன் நடிகை ஷிவானி நகரம் மற்றும் கானா வினோத் போன்ற பிரபலங்களும் இணைந்து நடித்துவருகிறார்.
இதையும் படிங்க: ரத்தம் தெறிக்க தெறிக்க.. வெளியானது லோகேஷ் கனகராஜின் ‘டிசி’ படத்தின் ரிலீஸ் ட்ரெயிலர்..!
இந்த படத்தை டிராமா கம்பெனி என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இசையமைப்பாளராக இசையமைத்துவருகிறார். இந்த படமானது ரோம்-காம் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுவரும் நிலையில், அதன் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகிவருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன் தொடங்கிய நிலையில், சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த 2026ம் ஆண்டு இறுதிக்குள் இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இப்படம் தொடர்பான அப்டேட்டுகள் வெளியாகும் என் எதிர்பார்க்கப்படுகிறது.