AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தனுஷ் உடன் அடுத்து கூட்டணி சேர்வது எப்போது? வெங்கி அட்லூரி ஓபன் டாக்

Director Venky Atluri talks about collaborate with Dhanush | தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் தனுஷ் உடன் அடுத்ததாக இணைய உள்ள படம் குறித்து இயக்குநர் வெங்கி அட்லூரி பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தனுஷ் உடன் அடுத்து கூட்டணி சேர்வது எப்போது? வெங்கி அட்லூரி ஓபன் டாக்
தனுஷ் மற்றும் வெங்கி அட்லூரிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 31 Jul 2026 08:30 AM IST

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் வெங்கி அட்லூரி. இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் இவர் தமிழ் சினிமாவில் வாத்தி என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார். இந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாக்கப்பட்டது. இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்து இருந்த நிலையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி தெலுங்கு சினிமாவில் இயக்கும் படங்களை தமிழ் ரசிகர்கள் பாராட்டி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் அடுத்ததாக விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் தொடர்ந்து பேட்டிகளை அளித்து வரும் இயக்குநர் வெங்கி அட்லூரி விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் வெளியீட்டிற்கு பிறகு அடுத்தடுத்து எடுக்க உள்ள படங்கள் என்ன என்ன என்பது குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார். அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

தனுஷ் உடன் அடுத்து கூட்டணி சேர்வது எப்போது?

தனுஷ் சாருடன் மீண்டும் எப்போது கைகோர்ப்பீர்கள்? நீங்கள் ஒரு கதையுடன் திரும்பி வருவதற்காக தனுஷ் சாரும் காத்திருப்பதாகக் கூறினார் என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த இயக்குனர் வெங்கட் அட்லூரி, நான் இன்னும் திரைக்கதை எழுத வேண்டும். நான் தனுஷ் சாரிடம் படத்தின் அடிப்படைக் கருத்தை மட்டுமே கூறியுள்ளேன், எனவே முதலில் எழுதும் பணியை முடிக்க வேண்டும்.

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்திற்குப் பிறகு, தனுஷ் சாரின் படத்திற்கான திரைக்கதையை எழுதத் தொடங்குவேன். அது ஒரு காவல்துறைப் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. அவரும் ஒரு இயக்குனர், அதனால் அவரிடம் கொண்டு செல்வதற்கு முன் கதை முற்றிலும் சரியாக உள்ளதா என்பதை நான் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… ஜன நாயகன் படத்தை எடுப்பதைவிட வெளியிடவே சிரமமாக இருந்தது – கே.வி.என். வெங்கட் நாராயணன்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள் பதிவு:

Also Read… லக்கி பாஸ்கர் 2 படம் வருமா? வராதா? இயக்குநர் வெங்கி அட்லூரி கொடுத்த அப்டேட்

Follow Us