AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கேரளாவில் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் தியேட்டர் ரிலீஸ் உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம்

Theatrical release rights for the movie Viswanath and Sons in Kerala | நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் கேரள வெளியீட்டு உரிமையைப் பிரபல நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் தியேட்டர் ரிலீஸ் உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம்
விஸ்வநாத் & சன்ஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 30 Jul 2026 14:19 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் இதுவரை 45 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. நடிகர் சூர்யாவின் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கருப்பு. இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் பாதிக்கப்படும் மக்களைக் காக்கும் கருப்பு சாமியாக நடிகர் சூர்யா நடித்து இருந்தார். திரையில் பார்த்த அவரது ரசிகர்கள் சூர்யா கருப்பு சாமியாகவே காட்சியளித்தார் என்று சிலிர்த்து தங்களது விமர்சனத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது மட்டும் இன்றி சூர்யாவின் கெரியரில் இதுவரை வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதையையும் பெற்றதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து இந்த 2026-ம் ஆண்டில் நடிகர் சூர்யா நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். மேலும் இந்தப் படத்தில் நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்து உள்ளார். இயக்குநர் வெங்கி அட்லூரி இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். சித்தாரா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து உள்ள நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார்.

கேரளாவில் சூர்யா படத்தின் ரிலீஸ் உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம்:

இந்தப் படம் வருகின்ற 14-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில் நாட்களே உள்ள நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் திரையரங்கு வெளியீட்டு உரிமையை எந்த நிறுவனம் பெற்றுள்ளது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்து வருகின்றது. அந்த வகையில் கேரள மாநிலத்தில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை பிரபல நியூ சூர்யா ஃபிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… ஒரு காவல்துறை அதிகாரியாக நடிப்பது இதுவே முதல் முறை –  நடிகர் சசிகுமார்

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இந்திரன்ஸ் – மதுபாலா நடிப்பில் ஒரு ஃபீல் குட் படம் தான் இந்த சின்ன சின்ன ஆசை… ஓடிடி விமர்சனம் இதோ!

Follow Us