AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்திரன்ஸ் – மதுபாலா நடிப்பில் ஒரு ஃபீல் குட் படம் தான் இந்த சின்ன சின்ன ஆசை… ஓடிடி விமர்சனம் இதோ!

Chinna Chinna Aasai movie OTT review here | மலையாள சினிமாவில் மற்றும் ஒரு ஃபீல் குட் படமாக உருவாகி உள்ளது இந்த சின்ன சின்ன ஆசை படம். இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில் படம் எப்படி இருக்கிறது என்று தற்போது பார்க்கலாம்.

இந்திரன்ஸ் – மதுபாலா நடிப்பில் ஒரு ஃபீல் குட் படம் தான் இந்த சின்ன சின்ன ஆசை… ஓடிடி விமர்சனம் இதோ!
சின்ன சின்ன ஆசைImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Jul 2026 21:25 PM IST

மலையாள சினிமாவில் தொடர்ந்து அதிக அளவில் ஃபீல் குட் படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. தொடர்ந்து பலப் படங்கள் மலையாள சினிமாவில் வெளியாகி மலையாள சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதிலும் குறிப்பாக தமிழ் சினிமா ரசிகர்களிடையே மலையாளப் படங்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதற்கு காரணம் அதிக அளவில் மலையாள சினிமாவில் படங்கள் வாழ்க்கையின் எதார்த்தை காட்டுகின்றனர். இவர்களிடையே நடிகர்களை பிரப்மாண்டமாக காட்டுவதற்காக அவர்களை பறந்து பறந்து சண்டைப்போட வைப்பதில்லை. இதன் காரணமாகவே இவர்களின் படங்கள் மற்ற மொழிப் படங்களை விட மலையாளப் படங்கள் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

அந்த வகையில் மலையாள சினிமாவில் கடந்த ஜூன் மாதம் 19-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் சின்ன சின்ன ஆசை. இந்தப் படத்தை இயக்குநர் வர்ஷா வாசுதேவ் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் இந்திரன்ஸ் நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகை மதுபாலா நாயகியாக நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் அபர்ணா பாலமுரளி, ஜாபர் சாதிக், விஷ்ணு அகஸ்தியா, தம்பி ராமையா, காளி வெங்கட், சாய் ஜனனி என பலர் இணைந்து நடித்து உள்ளனர்.

இந்திரன்ஸ் – மதுபாலாவின் ஃபீல் குட் படம் தான் சின்ன சின்ன ஆசை:

தமிழ் நாட்டில் தஞ்சாவூரில் இருந்து நடுத்தர வயது உள்ள குழு ஒன்று வாரணாசிக்கு ஆன்மீக சுற்றுழா வருகிறார்கள். அந்த குழுவில் நாயகி மதுபாலாவும் வருகிறார். இவர் அந்த குழுவினரிடம் இருந்து தனியாக மிஸ்ஸாகிறார். அப்போது அவரது பர்ஸ் மற்றும் போனும் தொலைந்துவிடுகிறது. இப்படி இருக்கும் சூழலில் அவர் அழுதுகொண்டே வாரணாசி பகுதியில் உக்காந்த் இருக்கிறார். அங்கு வரும் மலையாளியான இந்திரன்ஸ் மதுபாலாவிற்கு உதவி செய்ய முயற்சிக்கிறார். முதலில் அதனை ஏற்க மறுக்கும் மதுபாலா பிறகு அவருடன் செல்கிறார்.

Also Read… சமூகவலைதளத்தில் 25 மில்லியன் பார்வைகளைக் கடந்தது அலாக்கா லோவா பாடல்

அப்படி தனது குழுவை இந்திரன்ஸ் உடன் தேடி செல்லும் மதுபாலா அவர் சின்ன வயதில் இருந்து தொலைத்த பல உணர்வுகளை மகிழ்ச்சியாக கொஞ்சம் கொஞ்சமாக செய்து வருகிறார். ஒரு கட்டத்தில் இந்திரன்ஸ் மீது மது பாலாவிற்கும் மது பாலாவின் மீது இந்திரன்ஸ்கும் ஒரு ஈர்ப்பு ஏற்படுகின்றது. இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் சூர்யா இப்படிதான் இருப்பார் – இயக்குநர் வெங்கி அட்லூரி

Follow Us