20 ஆண்டுகளைக் கடந்தது சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்… கொண்டாடும் ரசிகர்கள்
Unakkum Enakkum movie completes 20 years today | நடிகர்கள் ரவி மோகன் மற்றும் த்ரிஷா கிருஷ்ணன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும். இந்தப் படம் 20 ஆண்டுகளை இன்று நிறைவு செய்துள்ளது.
தமிழ் சினிமாவில் கடந்த 28-ம் தேதி ஜூலை மாதம் 2005-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும். இந்தப் படத்தினை இயக்குநர் மோகன் ராஜா எழுதி இயக்கி இருந்த நிலையில் படம் வெளியான போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் ரொமாண்டிக் ஆக்ஷன் ட்ராமா பாணியில் உருவான இந்தப் படத்தில் நடிகர் ரவி மோகன் நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பிரபு, கே.பாக்யராஜ், ரிச்சா பல்லோட், கீதா, சந்தானம், கொச்சின் ஹனிஃபா, மணிவண்ணன், தேஜாஸ்ரீ, கலாபவன் மணி, லிவிங்ஸ்டன், காதல் தண்டபாணி, மல்லிகா, கஞ்சா கருப்பு, காதல் அருண், டி.எஸ்.பி.கே. மௌலி, விஜயகுமார், அரவிந்த் ஜே. ஆகாஷ், ஸ்ரீரண்ஜானி. கே. மௌலி, ஸ்ரீரண்ஜானி, கே. சுந்தர், பாவா லட்சுமணன், கொட்டாச்சி, விஸ்வேஸ்வர ராவ் மற்றும் ஜப்பான் குமார் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்த்ப் படத்திற்கு இசையமைப்பாளர் தேதி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்த நிலையில் படத்தை போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Also Read… Magudam: விஷாலின் மகுடம் திரைப்படத்திலிருந்து ‘கலங்காதே’ பாடல் வெளியானது!




20 ஆண்டுகளைக் கடந்தது சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்:
தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்த சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்தப் படத்தில் பணியாற்றிய படக்குழுவினர் இயக்குநர் மற்றும் ரசிகர்கள் அனைவரும் படம் குறித்து நெகிழ்ந்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் இந்தப் படம் தற்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான போதும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read… Malavika Mohanan: அப்படிப்பட்ட வேடங்களில் நடிக்க விரும்புகிறேன் – மாளவிகா மோகனன்!