நாளை வெளியாகிறது ஓம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்… வைரலாகும் புரோமோ வீடியோ குறித்த அப்டேட்
OM Movie First Single Promo Update | நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ஓம் படம். நாளை இந்த ஓம் படத்தில் இருந்து முதல் சிங்கிள் வீடியோ நாளை வெளியாக உள்ள நிலையில் இன்று மாலை அந்தப் பாடலின் புரோமோ வீடியோ இணையத்தில் வெளியாக உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருகிறார் நடிகர் தனுஷ். இவர் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து நாயகனாக மட்டும் இன்றி இயக்குநராவும், தயாரிப்பாளராகவும், பாடகராக மற்றும் பாடலாசிரியராகவும் பல பணிகளை சினிமாவில் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பணியாற்றும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக கர படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் அந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தாக உருவாகி வரும் படத்திற்கு ஓம் என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி வருகிறார்.
மேலும் இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிகர்கள் மம்முட்டி, சாய் பல்லவி மற்றும் ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். தொடர்ந்து இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இருந்து முதல் பாடல் எப்போது வெளியாகும் என்றும் அதன் புரோமோ வீடியோ எப்போது வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.




நாளை வெளியாகிறது ஓம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்:
இந்த நிலையில் நடிகர் தனுஷின் பிறந்த நாள் நாளை 28-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு கொண்டாடப்படுகின்றது. இந்த பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் தனுஷின் ஓம் படத்தில் இருந்து முதல் சிங்கிள் வீடியோ வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்தப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது இன்று மாலை முதல் சிங்கிள் வீடியோவின் புரோமோ வீடியோவை வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… பர்த்டே பாய் ஜேசன் சஞ்சய்க்கு வாழ்த்து கூறிய சிக்மா படக்குழு
ஓம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Time to start the celebration 💥🥁#OM First Single Promo Video coming up at 5️⃣PM today.
A @SaiAbhyankkar Musical festival.@dhanushkraja @mammukka @Rajkumar_KP @wunderbarfilms @RTakeStudios @Sai_Pallavi92 @sreeleela14 @Shra2309 @azy905 @theSreyas @sandy_sashr @vishurams… pic.twitter.com/b4v6htFT1b
— Wunderbar Films (@wunderbarfilms) July 27, 2026
Also Read… குடும்பங்கள் கொண்டாடிய தலைவன் தலைவி படம் ஒரு ஆண்டை நிறைவு செய்தது