Jana Nayagan: லீக்கானாலும் பீக் குறையல.. ஜன நாயகன் பட முதல் நாள் தமிழக வசூல் எவ்வளவு தெரியுமா?
Jana Nayagan First Day TN Collection: தமிழ் சினிமாவில் 2026ம் ஆண்டு ஜூலை மாதத்தில் வெளியாகி மிக பிரம்மாண்ட வரவேற்பை பெற்றுவரும் திரைப்படம்தான் ஜன நாயகன். இந்த படமானது திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டுவரும் நிலையில், தமிழகத்தில் முதல் நாள் முடிவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது.
தென்னிந்திய சினிமா ரசிகர்கள் ஆவலுடனும், ஆரவாரத்துடனும் திரையரங்குகளில் பார்த்து கொண்டாடிவரும் பிரம்மாண்ட திரைப்படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இப்படமானது தமிழக முதலமைச்சர் விஜய்யின் (CM Vijay) நடிப்பில் சினிமாவில் இறுதியாக உருவாக்கப்பட்டிருந்த திரைப்படமாகும். இப்படத்தை இயக்குநர் எச் வினோத் (H Vinoth) இயக்க, மிக சிறப்பாக இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படமானது அரசியல், பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் அதிரடி ஆக்ஷன் போன்ற கதைக்களத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகியிருந்தது. கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கும் மேல் சென்சார் பிரச்சனையின் காரணமாக இப்படம் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், 2026ம் ஆண்டு ஜூலை 23ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியுள்ளது.
கிட்டத்தட்ட 6 மாத ரசிகர்களின் காத்திருப்பு பலனாக இந்த திரைப்படம் வெளியாகி, திரையரங்குகளில் ஹிட்டடித்துவருகிறது. இணையத்தில் ஏற்கனவே வெளியாகியிருந்தாலும், அந்த பீக் குறையாமல் திரையரங்குகளில் ரசிகர்கள் புடைசூழ வெற்றி படமாக தளபதி வெற்றிகொண்டானின் ஜன நாயகன் அமைந்துள்ளது. இப்படம் முதல் நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் எத்தனை கோடிகளை வசூலித்துள்ளது என இணையத்தில் தகவல்கள் வெளியாகிவருகிறது.




இதையும் படிங்க: என்ன தளபதி மாதிரி அழவைக்க முடியாது.. செக் மோசடி வழக்கு குறித்து விமல் அளித்த பதில்!
ஜன நாயகன் படத்தின் முதல் நாள் தமிழக வசூல் விவரம் :
தளபதி விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல் மற்றும் மமிதா பைஜூவின் நடிப்பில், மிகவும் பிரம்மாண்டமான படமாக இந்த ஜன நாயகன் படம் உருவாகியிருந்தது. இப்படம் தமிழகத்தில் மட்டும் முதல் நாள் முடிவில் கிட்டத்தட்ட ரூ 31 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளதாம். மேலும் உலகளவில் ரூ 78 முதல் 80 கொடுக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஜன நாயகன் ரிலீஸோட ஸ்ட்ரெஸ் எல்லாம் முடிஞ்சிது – எச் வினோத் பேச்சு!
இப்படம் தெலுங்கில் 2.75 கோடியும், கேரளாவில் 3.5 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. முதல் நாளிலே இப்படத்திற்கு இவ்வளவு பிரம்மாண்டமான வசூல் கிடைத்துள்ளது என்பது பெரிய சாதனை என கூறலாம்.
ஜன நாயகன் பட முதல் நாள் வசூல் குறித்து இணையத்தில் வைரலாகும் எக்ஸ் பதிவு:
The first day collection of the film #JanaNayagan in Tamil Nadu is 31 crores. pic.twitter.com/I9myf6a1gw
— Movie Tamil (@_MovieTamil) July 24, 2026
ரூ 500 கோடி வசூலை எட்டுமா?
இப்படமானது முதலமைச்சர் விஜய்யின் கடைசி திரைப்படம் என்ற நிலையில், இப்படத்தின் மீது இன்னும் அளவில்லாத ஆரவாரம் இருக்கிறது. இப்படம் 2026ம் ஆண்டு ஜூலை 23ம் தேதியில் வெளியாகியுள்ள நிலையில், இன்னும் வார இறுதியில் இப்படத்திற்கு அதீத வரவேற்பு இருக்கும் என கூறப்படுகிறது. முதல் நாளிலே சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டுவரும் நிலையில், இன்னும் சில நாட்களில் சுமார் ரூ 500 கோடி முதல் 700 கோடிகள் வரை வசூல் செய்யும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.