விஜய் ஆண்டனி பர்த்டே ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட அப்பா குட்டி படக்குழு
Appa Kutty movie team relase a poster and wishes to Vijay Antony on his birthday | விஜய் ஆண்டனியின் பிறந்த நாளை முன்னிட்டு அப்பா குட்டி படக்குழு போஸ்டர் வெளியிட்டு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர்.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், தயாரிப்பாளராகவும், நாயகனாகவும் பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார் விஜய் ஆண்டனி. இவர் சினிமாவில் இசையமைப்பாளராகவே தனது வாழ்க்கையை முதலில் தொடங்கினார். மேலும் பல முன்னணி நாயகன்களின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வந்தார். விஜய் ஆண்டனியின் இசையில் வெளியான பெரும்பாலான பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பிசியான இசையமைப்பாளராக வலம் வந்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிப்பின் மீது இருந்த ஆர்வம் காரணமாக நாயகனாக தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து நாயகனாக பலப் படங்களில் நடித்த நடிகர் விஜய் ஆண்டனியின் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது நடிப்பில் வெளியாகும் பெரும்பாலான படங்களை அவரே தயாரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து நாயகனாக ஹிட் படங்களை கொடுத்து வரும் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் நூறு சாமி படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த நூறு சாமி படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் படம் குறித்த அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.




விஜய் ஆண்டனி பர்த்டே ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட அப்பா குட்டி டீம்:
அதன்படி நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் அப்பா குட்டி. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வைத்தே இது ஒரு அப்பா மகள் பாசத்தை மையமாக வைத்து உருவாகி உள்ள படம் என்பது வெளிப்படையாக தெரிகிறது. இந்தப் படத்தை இயக்குநர் மு மாரன் எழுதி இயக்கி வருகிறார். மேலும் விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம் தான் படத்தை தயாரித்தும் வருகின்றது. இந்த நிலையில் விஜய் ஆண்டனி இன்று 24-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… Trisha Krishnan: முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் பட FDFS-வை கண்டுகளித்த திரிஷா – வைரலாகும் வீடியோ!
அப்பா குட்டி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
A beautiful story. A heartfelt performance. And a birthday worth celebrating. ❤️
Team #AppaKutty wishes Vijay Antony Sir a very Happy Birthday. May your journey continue to inspire millions.
Starring 🔥 @Vijayantony
Written & Directed by: @mumaran1
A @Vijayantony Musical 💥 pic.twitter.com/QCsPAtElmO
— VijayAntonyFilmCorporation (@vijayantonyfilm) July 24, 2026
Also Read… கடும் அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்.. “புதுகோட்டை தியேட்டரில் திரைக்கு முள்வேலி” என்ன காரணம்!