AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Trisha Krishnan: முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் பட FDFS-வை கண்டுகளித்த திரிஷா – வைரலாகும் வீடியோ!

Trisha Krishnan Watches CM Vijays Jana Nayagan FDFS: ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே எதிர்பார்த்துவந்த பிரம்மாண்டமான திரைப்படம்தான் ஜன நாயகன். இப்படமானது இன்று (23/07/2026) உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் FDFS-வை பல்வேறு பிரபலங்கள் கண்டுகளித்த நிலையில், நடிகை திரிஷா தனது குடும்பத்துடன் பார்த்துள்ளார்.

Trisha Krishnan: முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் பட FDFS-வை கண்டுகளித்த திரிஷா – வைரலாகும் வீடியோ!
ஜன நாயகன் பட FDFS-வை பார்வையிட்ட திரிஷாImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 23 Jul 2026 14:56 PM IST

தென்னிந்திய சினிமாவில் உச்ச நாயகியாக இருந்துவருபவர் திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan). இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம் கருப்பு. (Karuppu) நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் வெளியாகியிருந்த இந்த படமானது மிகவும் பிரம்மாண்டமான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் வரவேற்பர்க்கு பின், இவரின் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமான படங்களும் உருவாகிவருகிறது. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார். அந்த வகையில் தமிழ் சினிமாவே கொண்டாடிவரும் புத்தம் புது திரைப்படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படத்தில் முதல்வர் விஜய் (CM Vijay) ஆக்ஷன் நாயகனாக நடித்துள்ள நிலையில், மிகவும் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றுவருகிறது.

பல்வேறு பிரச்சனைகளுக்குப் பிறகு இன்று, 2026ம் ஆண்டு ஜூலை 23ம் தேதியியோடு உலகமெங்கும் வெளியாகியுள்ளது.இப்படத்தின் FDFS -வை நடிகை திரிஷா கண்டுகளித்துள்ளார். தனது நண்பர்களுடன் சென்னை ரோகிணி திரையரங்கில் நடிகை திரிஷா கிருஷ்ணன் பார்வையிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஜன நாயகன் படம் லீக்கான போது பிரபல நடிகர் என்ன சந்தித்து ஆதரவாக பேசினார் – தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா

முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தின் FDFS -வை திரிஷா பார்த்து குறித்து வைரலாகும் வீடியோ:

ஜன நாயகன் குறித்த கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்:

நடிகை திரிஷா கிருஷ்ணன் தனது தாய் மற்றும் நண்பர்களுடன் ஜன நாயகன் பட FDFS -வை கண்டுகளித்தனர். சென்னை ரோகிணி திரையரங்கில் ஜன நாயகன் பட ரிலீஸ் மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்ட நிலையில், அந்த திரையரங்குகளில் பல்வேறு நடிகர்கள் மற்றும் ரசிகர்களும் கண்டுகளித்திருந்தனர்.

இதையும் படிங்க: அனிருத் முதல் மமிதா பைஜூ வரை… ஜன நாயகன் படத்தின் FDFS-வை கண்டுகளித்த பிரபலங்கள்!

ஏற்கனவே ஜன நாயகன் படக்குழுவினரும் சென்னை குரோம்பேட்டையில் உள்ள திரையரங்கில் ஜன நாயகன் படத்தை கண்டுகளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், ஜன நாயகன் படத்தை பார்க்கவந்த திரிஷாவிடம், ஜன நாயகன் படம் பற்றி கேள்விகேட்டிருந்த நிலையில், அவர் அவர் செய்தியாளரிடம், நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என கூறிவிட்டு திரையரங்குக்குள் சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜன நாயகன் படத்தை கொண்டாடும் நடிகர்கள்:

கிட்டத்தட்ட 7 மாத தாமதத்திற்கு பிறகு ஜன நாயகன் படமானது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஜூலை 23ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருக்கும் நிலையில், அதீத வரவேற்பு கிடைத்துவருகிறது. இப்படத்தை மமிதா பைஜூ, கீர்த்தி சுரேஷ், திரிஷா, அர்ஜுன்தா, துஷாரா விஜயன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்கள் FDFS -வை பார்த்து கொண்டாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us