AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அனிருத் முதல் மமிதா  பைஜூ வரை… ஜன நாயகன் படத்தின் FDFS-வை கண்டுகளித்த பிரபலங்கள்!

Celebrities who watched the FDFS of the movie Jana Nayagan are listed here | தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ஜன நாயகன் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில் முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்த பிரபலங்களின் பட்டியல் இதோ.

அனிருத் முதல் மமிதா  பைஜூ வரை… ஜன நாயகன் படத்தின் FDFS-வை கண்டுகளித்த பிரபலங்கள்!
பிரபலங்கள்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 23 Jul 2026 12:10 PM IST

தமிழ் சினிமாவில் இந்த 2026-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து ரசிகர்கள் மிகுந்த ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்த படம் ஜன நாயகன். நடிகர் தளபதி விஜய் நடிப்பில் உருவான இந்தப் படம் கடந்த ஜனவரி மாதமே திரையரங்குகளில் வெளியாக வேண்டியது. ஆனால் படத்திற்கு உரிய நேரத்தில் சென்சார் கிடைக்காத காரணத்தால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து 6 மாத கால போராட்டத்திற்கு பிறகு ஜன நாயகன் படத்திற்கு ஏ சான்றிதழை வழங்கியது. இயக்குநர் எச். வினோத் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். நடிகர் தளபதி விஜயின் நடிப்பில் உருவான கடைசிப் படம் என்பதால் இந்தப் படத்தின் மீது திரையுலக ரசிகர்களுக்கு மட்டும் இன்றி பிரபலங்களுக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பல முன்னணி நடிகர்களின் படங்களுகான புரமோஷனிலும் பிரபலங்கள் தொடர்ந்து ஜன நாயகன் குறித்து பேசி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அனைத்துப் பிரச்சனைகளும் முடிவடைந்து இன்று 23-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு ஜன நாயகன் படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் இந்தப் படத்தின் முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்க எவ்வளவு ஆர்வமாக இருந்தனரோ அப்படி பிரபலங்களும் முதல்நாள் முதல் காட்சியைப் பார்க்க ஆவளுடன் சென்றுள்ளனர். அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தற்போது பார்க்கலாம்.

ஜன நாயகன் முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்த்த அனிருத்:

தளபதி விஜயின் ஜன நாயகன் படத்தில் இசையமைத்த இசையமைப்பாளர் அனிருத் படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணா உடன் வெற்றி திரையரங்கில் படத்தைப் பார்த்து மகிழ்ந்தார்.

ஜன நாயகன் முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்த்த மமிதா பைஜூ:

தளபதி விஜய் உடன் இணைந்து ஜன நாயகன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை மமிதா பைஜூ வெற்றி திரையரங்குகளில் ரசிகர்களுடன் நடிகை மமிதா பைஜூ படத்தைப் பார்த்த வீடியோ வெளியாகி உள்ளது.

தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்ட பதிவு:

தயாரிப்பாளர் அர்ச்சனாக கல்பாத்தி ஜன நாயகன் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை அவர்களின் திரையரங்கான ஏஜிஎஸ்-சில் பார்த்துள்ளார். முன்னதாக அவர் தளபதி விஜயின் படத்தை எப்படி கொண்டாடினார் என்பதற்கான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… நீ இறங்கி ஆடு கபிலா, இது நம்ம காலம்… சார்பாட்ட பரம்பரை படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவடைந்தது!

ஜன நாயகன் பார்க்க சென்ற நடிகை கீர்த்தி சுரேஷ்:

தளபதி விஜய் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள ஜன நாயகன் படத்தை முதல் நாள் முதல் காட்சியை நடிகை கீர்த்தி சுரேஷ் திரையரங்குகளுக்கு சென்று பார்த்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

Also Read… சூர்யா பர்த்டே ஸ்பெஷல்… நாளை வெளியாகிறது விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் 2-வது சிங்கிள் புரோமோ

Follow Us