AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜன நாயகன் படம் லீக்கான போது பிரபல நடிகர் என்ன சந்தித்து ஆதரவாக பேசினார் – தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா

Producer Venkat K. Narayana Recent Interview Viral On Social Media | ஜன நாயகன் படம் நாளை பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சமீபத்தில் அளித்தப் பேட்டி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

ஜன நாயகன் படம் லீக்கான போது பிரபல நடிகர் என்ன சந்தித்து ஆதரவாக பேசினார் – தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா
வெங்கட் கே. நாராயணாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 22 Jul 2026 19:14 PM IST

தமிழ் சினிமாவில் நாளை 23-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜன நாயகன். இயக்குநர் எச்.வினோத் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் தளபதி விஜய் நாயகனாக நடித்து உள்ளார். இதுதான் நடிகர் தளபதி விஜய் நடிப்பில் வெளியாக உள்ள இறுதிப் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராக பதிவி எற்ற நிலையில் இனி படங்களில் நடிக்கமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மிகவும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தென்னிந்திய சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக உள்ள கே.வி.என் புரடெக்‌ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயண தயாரித்து உள்ளார்.

இந்தப் படத்தின் சென்சார் பிரச்சனை தொடங்கி தொடர்ந்து படத்தின் லீக் என பல பிரச்சனைகளை அடுத்தடுத்து சந்தித்தது. பல பிரச்சனைகளுக்கு மத்தியில் ஒவ்வொரு பிரச்சனைகளையும் சரி செய்து தற்போது படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆனால் இந்தப் படத்தின் வெளியீட்டிற்காக படக்குழு கடந்து வந்த நிகழ்வுகளை தொடர்ந்து பேட்டிகளில் தெரிவித்து வருகின்றனர்.

ஜன நாயகன் லீக்கானபோது பிரபல நடிகர் எனக்கு ஆதரவாக பேசினார்:

அந்த வகையில் ஜன நாயகன் படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயண சமீபத்தில் அளித்தப் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் அவரிடம் ஜன நாயகன் படம் லீக்கான போது பிரபலங்கள் யார் ஆதரவாக பேசியது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தயாரிப்பாளர் பேசியதாவது, தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த சிவகார்த்திகேயன் சார், பைரசி (திருட்டுப் பிரதி) விவகாரம் நடந்த பிறகு பெங்களூரில் என்னைச் சந்தித்தார். அந்த விவகாரம் குறித்து அவர் உண்மையாகவே கவலைப்பட்டார் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read…. Suriya: சூர்யா நடிக்க மறுத்த டாப் 5 ஹிட் படங்கள் என்னென்ன தெரியுமா?

இணையத்தில் வைரலாகும் ஜன நாயகன் பட தயாரிப்பாளர் பேச்சு:

Also Read…. பிக் பாஸ் சீசன் 10 தமிழ் எப்போது தொடங்குகிறது?- இணையத்தில் வைரலாகும் தகவல்!

Follow Us