Ravi Mohan: பெருமாளாக ரவி மோகன்.. பிறந்தநாளில் வெளியான தெலுங்கு படத்தின் அறிவிப்பு!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரவி மோகன். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து புது படங்கள் உருவாகிறது. இன்று (10/09/2026) இவர் தனது 46வது பிறந்தநாளை கொண்டாடிவரும் நிலையில், தெலுங்கில் இவர் முதல் முறையாக நடிக்கும் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இதில் இவர் பெருமாளாக நடிக்கிறாராம்.
கோலிவுட் சினிமாவில் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்துவருபவர் ரவி மோகன் (Ravi Mohan). இவர் தமிழ் மொழியில் படங்களில் நயாகனாக நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம் பராசக்தி (Parasakthi). இயக்குநர் சுதா கொங்கராவின் (Sudha Kongara) இயக்கத்தில் உருவான இப்படமானது 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியானது. இதில் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) ஹீரோவாக நடித்திருந்த நிலையில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீலீலா (Sreeleela) நடித்திருந்தார். இதில் நடிகர் ரவி மோகன் வில்லனாக நடித்திருந்த நிலையில், அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. ந்த படத்திற்கு பின் தமிழில் மட்டும் ரவி மோகனின் நடிப்பியல் கிட்டத்தட்ட 4 படங்கள் இருந்தது. இந்த படங்களின் ஷூட்டிங்கை ரவி மோகன் முடித்த நிலையில், தற்போது புதிய படங்களிலும் ஒப்பந்தமாகிவருகிறார். இவர் இன்று (10/09/2026) தனது 46வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிவருகிறார்.
அதை முன்னிட்டு அவரின் புதிய படங்களுக்கான அப்டேட்டுகளும் வெளியாகிவருகிறது. இதுவரை இவர் தெலுங்கு மொழியில் எந்த படங்களிலும் பணியாற்றாத நிலையில், முதல் முறையாக தெலுங்கு சினிமாவில் புது படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தில் ரவி மோகன் பெருமாளாக நடிக்கிறாராம். இதன் அறிவிப்பை ரவி மோகன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: சூரி அண்ணனின் கடின உழைப்பு.. மண்டாடி படக்குழுவை வாழ்த்திய சிவகார்த்திகேயன்!
தனது புதிய தெலுங்கு படம் குறித்து நடிகர் ரவி மோகன் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
This is a divine blessing on my birthday 😊 playing lord Venkateswara himself 🙏🏼 thank you Manoj, Anil Sunkara sir, director Tej and the while team ❤️ om namo Narayana 🙏🏼 pic.twitter.com/cuVmOpJBZl
— Ravi Mohan (@iam_RaviMohan) September 10, 2026
பெருமாளாக நடிக்கும் ரவி மோகன்:
தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் மஞ்சு மனோஜ். இவரின் நடிப்பில் தெலுங்கு மொழியில் பல படங்கள் வெளியாகிவருகிறது. அந்த விதத்தில், இயக்குநர் தேஜ் உப்பளபதியின் இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்துள்ளார். தெய்வீகம் மற்றும் நகைச்சுவையான கதையில் இப்படம் உருவாகும் நிலையில், இப்படத்திற்கு “வட்டி காசல வாட” என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் மஞ்சு மனோஜ் ஹீரோவாக நடிக்கும் நிலையில், இதில் ரவி மோகனும் நடிக்கிறாராம். இப்படத்தில் நடிகர் ரவி மோகன் பெருமாளாக நடிக்கிறாராம்.
இதையும் படிங்க: ஆளும் அணி Vs எதிர் அணி.. கேப்டனை சாடிய போட்டியாளர்கள்.. கண்ணீரில் சாத்விகா!
ரவி மோகன் நெகிழ்ச்சி:
இன்று ரவி மோகன் தனது 46வது பிறந்தநாளை கொண்டாடிவரும் நிலையில், அவரின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இதை தனது எக்ஸ் பக்கத்தில் ரவி மோகனும் பகிர்ந்துள்ளார். அதில் அவர், “என் பிறந்தநாளில் கிடைத்த ஒரு தெய்வீக ஆசிர்வாதம், வெங்கடேஸ்வரப் பெருமானாகவே நடிப்பது என அதில் பகிர்ந்து, படக்குழுவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.



