AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிரபல எழுத்தாளரும் வசன கர்த்தாவுமான இரா.முருகன் மரணம் – கமல்ஹாசன் இரங்கல்

Writer Era Murugan Passes Away : பிரபல எழுத்தாளரும், திரைப்பட வசனகர்த்தாவுமான இரா. முருகன்நவம்பர் 3, 2026 இன்று உடல் நலக்குறைவால் காலமானார். இந்த நிலையில் அவரது மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் சில பேர் மொழியைக் காதலிப்பார்கள். சிலரை மொழியே காதலிக்கும் என இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல எழுத்தாளரும் வசன கர்த்தாவுமான இரா.முருகன் மரணம் – கமல்ஹாசன் இரங்கல்
இரா.முருகன் - கமல்ஹாசன்
Karthikeyan S
Karthikeyan S | Published: 03 Nov 2026 21:36 PM IST

தமிழ் இலக்கிய உலகில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கென தனி இடத்தைப் பிடித்த பிரபல எழுத்தாளரும், திரைப்பட வசனகர்த்தாவுமான இரா. முருகன் (Era Murugan) நவம்பர் 3, 2026 இன்று உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 73. சிறுகதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புகள் என பல்வேறு தளங்களில் இயங்கிய அவர் திரைப்பட வசனகர்த்தாவாகவும் அறியப்படுகிறார். இந்த நிலையில் அவரது மறைவுக்கு கமல்ஹாசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல எழுத்தாளரும் வசன கர்த்தாவுமான இரா.முருகன் மரணம்

நாவல்கள், சிறுகைதைகள் மட்டுமல்லாமல், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் ஆகியவற்றையும் எழுதியுள்ளார். இவரது விஸ்வரூபம், அச்சுதம் கேசவம், வாழ்ந்து போதீரே போன்ற நாவல்களும், ஐம்பது பைசா ஷேக்ஸ்பியர், மந்திரவாதியும் தபால் அட்டைகளும் போன்ற சிறுகதை தொகுப்புகளும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம்.

இதையும் படிக்க : இனி திரையரங்குகளில் காலை 6 மணிக்கே முதல் காட்சி – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு – தீபாவளிக்கு வசூல் வேட்டை!

இந்த நிலையில் இவர் கமல்ஹாசன் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்துக்கும், அஜித் குமார் நடித்த பில்லா 2 படத்துக்கும் வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மகன் அஸ்வின் முருகன் தமிழ்நாடு கிரிக்கெட்டில் முக்கிய வீரராக திகழ்கிறார். ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் அணிகளுக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இரா.முருகனின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பதிவில், இரா முருகனும் நானும் சேர்ந்து எழுதிய உன்னைப்போல் ஒருவன் படத்தில் ஒரு வசனம். ‘மறதி ஒரு தேசிய வியாதி’. அந்த மறதி எனக்கும் முருகனுக்கும் வராது என்று நம்பியிருந்த எங்களுக்கு முருகனின் ‘மறதி வியாதி’ அதிர்ச்சிதான். கவலைப்படாதீர்கள். இந்த மறதியுடன் தேக்கி வைத்திருந்த கோபதாப குரோதங்களும் மறந்துரும். சோகங்களும் கூட என்றேன்.

கமல்ஹாசன் இரங்கல்

 

அது போனா போயிட்டு போறது கூடவே நம்ம சந்தோச நாட்களும் ஜோக்ஸூம் மறந்துபோயிடுமோன்ற பயமாயிருக்கு என்றார் ஈராமு. எல்லாத்தோடயும் சேர்த்து பயமும் மறந்த வீரரா வாழவேண்டியதுதான். இது பெரிய சோகமில்ல முருகன் என்றேன். இருவரும் சிரித்தோம். சத்தமாக நான். மனதிற்குள் அவர். முருகனின் கடைசி சோகம் அதுதான். சோகமும் பிரிவும் இனி என்போன்ற நண்பர்களுக்குத்தான்.

இதையும் படிக்க : ரயிலில் பகலில் தூங்கலாமா? சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

நாங்கள் நண்பர்களாக எங்களை ஊக்குவித்தவர் சுஜாதா ரங்கராஜன். அதுவும் எப்படி? உங்களுக்குப் பிறகு, நீங்கள் விட்ட இடத்தில் தொடங்கக் கூடிய எழுத்தாளரைக் கண்டுபிடித்துவிட்டீர்களா என அவரிடம் கேட்டேன். சுஜாதா தயக்கமில்லாமல் சொன்னார், ‘ஓ இரா. முருகன் சுஜாதா புகழ்ந்த அந்த இரா முருகன் என் நண்பர். இவர்களை எனக்குத் தெரியும் என்பதே என் பெருமை. சில பேர் மொழியைக் காதலிப்பார்கள். சிலரை மொழியே காதலிக்கும். இரா.முருகனின் காதல் ஒருதலைக் காதல் அல்ல என்று தெரிவித்துள்ளார்.

Follow Us