AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“உலகத் தமிழர்களுக்குப் பெருமிதமான தருணம்”: நவி பிள்ளைக்கு நோபல் பரிசு – கமல்ஹாசன் வாழ்த்து

Kamal Haasan Praises Navi Pillay ச தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தென்னாப்பிரிக்க சட்ட வல்லுநர் நவநீதம் 'நவி' பிள்ளைக்கு 2026 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இது உலகெங்கும் வாழும் தமிழர்களுக்குப் பெருமை சேர்க்கும் தருணம் என நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.

“உலகத் தமிழர்களுக்குப் பெருமிதமான தருணம்”: நவி பிள்ளைக்கு நோபல் பரிசு – கமல்ஹாசன் வாழ்த்து
நவி பிள்ளை - கமல்ஹாசன்
Karthikeyan S
Karthikeyan S | Published: 10 Oct 2026 17:11 PM IST

சென்னை, அக்டோபர் 10: தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தென்னாப்பிரிக்க சட்ட வல்லுநர் நவநீதம் ‘நவி’ பிள்ளைக்கு 2026 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இது உலகெங்கும் வாழும் தமிழர்களுக்குப் பெருமை சேர்க்கும் தருணம் என நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

நவி பிள்ளைக்கு நோபல் பரிசு – கமல்ஹாசன் வாழ்த்து

இதுகுறித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில், சில மனிதர்களின் வாழ்க்கைப் பயணம் நம் மனதை ஆழமாகத் தொடும் என்றும், நவி பிள்ளையின் வாழ்க்கையும் அத்தகையது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒப்பந்தத் தொழிலாளர்களாகத் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்ற தாத்தா, பாட்டியின் வழித்தோன்றலாக, எளிய குடும்பத்தில் பிறந்த நவநீதம் பிள்ளை, நிறவெறிக்கு எதிராக உறுதியுடன் போராடியவர். மேலும், திட்டமிட்ட பாலியல் வன்முறைகளை சர்வதேசச் சட்டத்தின் கீழ் இனப்படுகொலைக் குற்றங்களாக அங்கீகரிக்கச் செய்ததில் அவர் முன்னோடியாகத் திகழ்ந்தார் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

இதையும் படிக்க : Tamil Nadu Weather forecast: நாளை 12 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் எச்சரிக்கை

மனித உரிமைகளுக்கும் நீதிக்கும் அவர் ஆற்றிய பங்களிப்புக்குக் கிடைத்த அங்கீகாரமே இந்த நோபல் பரிசு என்றும், அவரது பயணம் வியக்கவைப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். என்னவொரு பிரமிக்கத்தக்கப் பயணம்! தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இந்தத் தென்னாப்பிரிக்கச் சட்ட வல்லுநர், மனித உரிமைகளுக்கும் நீதிக்கும் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இது உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்குப் பெருமிதமான தருணம் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பதிவில், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், குரலற்றவர்களின் உரிமைகளுக்காகவும் தமது வாழ்நாளையே அர்ப்பணித்த அவரது நெடிய பயணத்திற்குக் கிடைத்துள்ள அங்கீகாரம் இது! 2012-ஆம் ஆண்டு ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அவையில் அவரைச் சந்தித்து, ஈழத்தமிழர்களின் துயர்மிகுந்த வாழ்வையும், நீதிக்காகவும் கண்ணியமான வாழ்வுக்காகவும் அவர்கள் நடத்திவரும் போராட்டத்தையும் எடுத்துரைத்ததை இத்தருணத்தில் நெகிழ்வுடன் நினைவுகூர்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : “விவசாயிகள் கஷ்டப்பட்டு விளைவித்த நெல் வீணாவதை ஏற்க இயலாது”.. தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவநீதம் பிள்ளை 1941 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் தமிழ் வம்சாவளி குடும்பம் ஒன்றில் பிறந்தார். பல்வேறு வகையான பாகுபாடுகளை எதிர்கொண்ட பிறகு, அவர் ஒரு வழக்கறிஞராக உயர்ந்தார். தென் ஆப்பிரிக்காவின் நதால் மாகாணத்தில் சொந்தமாக சட்ட அலுவலகத்தைத் தொடங்கிய முதல் வெள்ளையர் அல்லாத பெண்மணி என்ற சாதனையை அவர் படைத்தார். நெல்சன் மண்டேலா போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களுக்காகவும், நிறவெறிக்கு எதிரான செயல்பாட்டாளர்களுக்காகவும் அவர் நீதிமன்றத்தில் வாதாடினார்.

ருவாண்டா இனப்படுகொலை தொடர்பான வழக்கை விசாரித்த தீர்ப்பாயத்தில் நீதிபதியாகவும் தலைவராகவும் அவர் பணியாற்றினார். போர்க்கால பாலியல் வன்முறையை இனப்படுகொலையின் ஒரு செயலாக அங்கீகரித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில் அவர் முக்கிய பங்காற்றினார். மேலும், ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் அவர் பணியாற்றினார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரிவின் தலைவராக, உலகம் முழுவதும் குடிமை உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அவர் குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us