AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் – புகார் வந்தது எப்போது? டிஜிபி விளக்கம்

கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் அநாகரிகமாக குறுஞ்செய்தி அனுப்பியதாக புகாரில் தாமதமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. காவல் துறைக்கு நேற்று முன் தினம்தான் புகார் வந்ததாகவும். புகாரை நேர்மையாக விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் – புகார் வந்தது எப்போது? டிஜிபி விளக்கம்
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ - டிஜிபி மகேஷ் குமார்
Karthikeyan S
Karthikeyan S | Published: 25 Nov 2026 14:05 PM IST

சென்னை, நவம்பர் 25 : கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் (Arul Vignesh) அநாகரிகமாக குறுஞ்செய்தி அனுப்பியதாக புகாரில் தாமதமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், காவல் துறைக்கு நவம்பர் 23, 2026 நேற்று முன் தினம்தான் புகார் வந்ததாகவும். புகாரை நேர்மையாக விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

கலெக்டரிடமிருந்து புகார் வந்தது எப்போது?

இது தொடர்பாக சென்னையில் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி எஸ்பி விசாரணை நடத்தி வருகிறார். மேலும் நவம்பர் 23, 2026 நேற்று முன் தினம்தான் பெண் ஆட்சியர் புகார் அளித்தார். உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணை நியாயமாக நடைபெறும். சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கப்படுமோ? அந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதையும் படிக்க : காற்று மாசுவில் டெல்லியை முந்திய கும்மிடிப்பூண்டி – நாட்டிலேயே முதலிடம் – அதிர்ச்சி ரிப்போர்ட்

இதற்கிடையில் தவெக அருள் விக்னேஷ் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு கடந்த சில நாட்களாக அந்தத் தொகுதியின் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் வாட்ஸ்அப் மூலமாகவும், ஆட்சியர் வசிக்கும் இடத்திற்கு சென்று மது போதையில் தகராறில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

முன்னதாக ஆட்சியர் புகார் அளித்த நிலையில். எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர் ஜாமினில் வெளிவராத பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ்க்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளனர். ஏற்கனவே 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி அருள் விக்னேஷின் வீட்டுக்கு வந்து சம்மன் அளித்துள்ளார். இந்த நிலையில் திருப்பூர் எஸ்.பி. சிருஷ்டி சிங், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணையை தொடங்கினார்.

இதையும் படிக்க : 1,00,800 விளக்குகளால் சிவலிங்க வடிவில் மகா தீபம்.. ஈஷா ஆதியோகி திருவுருவமும் ஜொலித்தது.. பக்தர்கள் சிறப்பு வழிபாடு!

உயர்நீதிமன்ற நீதிபதி கண்டனம்

இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமி நாராயணன் “புகாரை படிக்கும்போது, இந்த விவகாரத்தில் தேவையற்ற விளம்பரத்தை விரும்பாத காரணத்தாலேயே, மாவட்ட கலெக்டர் புகார் அளிக்காமல் தவிர்த்தது தெரிகிறது. மாவட்ட கலெக்டர் நிலையிலேயே, இத்தகைய சூழல் நிலவுகிறது என்றால், குறைந்த அதிகாரப் பொறுப்பில் உள்ள ஒருவர், பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான சட்டத்தின் கீழ் புகார் அளிக்க நேரிட்டால், நிலைமை என்னவாகும் என்று நினைத்தாலே அச்சமாக இருக்கிறது.

உயரிய பொறுப்பில் இருப்பவர், பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான சட்டத்தின் கீழ் புகார் அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பது, நம் குடியரசுக்கு ஒரு துயரமான நிகழ்வு. துன்புறுத்தல் என்பது காலம், இடம், பொருளாதார நிலை, அந்தஸ்து, பதவி என எதையும் கருத்தில் கொள்வதில்லை என்பதை இது காட்டுகிறது என கண்டனம் தெரிவித்துள்ளார்.

Follow Us