இந்தியாவில் இதுபோல நடந்ததில்லை.. தவெக எம்எல்ஏவை கைது செய்யுமாறு டிஜிபியிடம் புகார்.. எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிய உதயநிதி!
Udhayanidhi Complaint To DGP : கள்ளக்குறிச்சி எம். எல். ஏ. அருள் விக்னேஷை கைது செய்யக்கோரி தமிழக டிஜிபி மகேஷ் குமார் அகர்வாலிடம் சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார் .
கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார் அளிக்கப்பட் நிலையில் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபியிடம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கள்ளக்குறிச்சி தொகுதியின் தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் தொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் டிஜிபி மகேஷ் குமார் அகர்வாலை சந்தித்து புகார் அளித்துள்ளோம். அலுவலகத்தில், டிஜிபி இல்லாத நிலையில், அவர் எங்கே என்று கேட்டதற்கு சிங்கப் பெண்கள் சிறப்பு படையின் பயிற்சிக்காக சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்தியாவில் இப்படி நடந்ததே கிடையாது
நாங்கள் கேட்பது என்னவெனில், சிங்கப்பெண் படை எங்கே உள்ளது. அப்படி என்ன பயிற்சி கொடுக்கப்படுகிறது. அவர்களுக்கு என்ன தான் வேலை. அனைவரும் மனசாட்சியை தொட்டு சொல்ல வேண்டும். யாராவது சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையை பார்த்து இருப்போமா. குற்றச் செயல்களில் தவெக நிர்வாகிகளே அதிக அளவு ஈடுபட்டு வருகின்றனர். தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு பெண் ஆட்சியருக்கு ஆளும் கட்சி எம்எல்ஏ ஆபாச மெசேஜ் அனுப்புவது இதுவே முதல் முறையாகும். இதுபோன்று இந்தியாவில் நடந்ததே கிடையாது.
மேலும் படிக்க: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ராஜினாமா முடிவு? விரைவில் கைதாகிறார்!
தவெக ஆட்சி அமைந்த 2- ஆவது மாதத்தில் பாலியல் புகார்
பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியரை தவெக தொண்டர்கள் அப்யூசிவ் விர்ச்சுவல் வாரியர்ஸ் தரகுறைவாக பேசுகின்றனர். குடித்துவிட்டு ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் சென்று தகராறு செய்தது எங்காவது நடந்திருக்கிறதா. தவெக மே மாதம் ஆசைக்கு வந்த நிலையில் ஜூலை மாதத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த மாதமே, பெண் ஆட்சியர் புகார் அளித்து இருந்த நிலையில் அதை தலைமைச் செயலாளர், முதல் அமைச்சர் ஜோசப் விஜயிடம் கூறினாரா. ஆனால், தலைமைச் செயலாளர் புகாரை மறைத்து பேசியுள்ளார். தலைமைச் செயலாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துணை சபாநாயகர், தவெக எம்எல்ஏவை கைது செய்ய வேண்டும்
ஜூலை மாதமே நாச்சியார் புகார் அளித்துள்ள நிலையில், 116 நாட்களாக முதல்வர் விஜய் தூங்கிக் கொண்டிருந்தாரா. தூங்கிக் கொண்டிருக்கும் தவெக அரசு, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கி அமைச்சர், பொய் சொல்வதற்காகவே இருக்கும் அமைச்சர் நிர்மல் குமார் அப்படி நடக்கவில்லை என கூறியுள்ளார். இந்த வழக்கில் அரசின் மீது துளியும் நம்பிக்கை இல்லை என்பதால் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். மனு அளித்த நபரை தாக்கிய துணை சபாநாயகர் ரவிசங்கரையும், அருள் விக்னேஷையும் கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.