முதல்வர் விஜய் தலைமையில் வெற்றி முதலீட்டாளர் மாநாடு – ரூ.58,214 கோடி முதலீடு… 65,786 பேருக்கு வேலைவாய்ப்பு!
VETTRI Investment and Conversion Conclave 2026 : சென்னையில் நடைபெற்ற வெற்றி முதலீடு மற்றும் செயலாக்க மாநாட்டில், தமிழகத்தில் புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.58,214 கோடி முதலீடும், 65,786 பேருக்கு வேலைவாய்ப்பும் உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, நவம்பர் 25 : சென்னையில் நடைபெற்ற வெற்றி முதலீடு மற்றும் செயலாக்க மாநாட்டில், தமிழகத்தில் புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.58,214 கோடி முதலீடும், 65,786 பேருக்கு வேலைவாய்ப்பும் உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் பேசிய தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, “இந்தியாவில் எந்த மாநிலம் அதிக அளவில் தொழில் முதலீடுகளை ஈர்க்கிறது, எந்த மாநிலங்களுக்கு இடையே போட்டி நிலவுகிறது என்ற விவாதம் தொழில் துறையில் எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரை, தொழில் துறையில் ஆரோக்கியமான போட்டியை வரவேற்கிறது. ஒரு முதலீடு என்பது உற்பத்தியாக மாற வேண்டும். நல்ல ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்புகளாக மாற வேண்டும் என்பதுதான் அரசின் இலக்கு என்று பேசினார்.