அபிஷன் ஜீவிந்தின் பிக்காசோ படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது? வெளியானது அப்டேட்!
Picasso Movie First Single Release Update Here | நடிகர் அபிஷன் ஜீவிந்த் தற்போது நாயகனாக நடித்து வரும் படம் பிக்காசோ. இந்தப் படம் இவர் நாயகனாக நடிக்கும் இரண்டாவது படம் ஆகும். இந்தப் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் இயக்குநர்களாக அறிமுகம் ஆகி தற்போது நடிகர்களாக வலம் வருபவர்கள் பலர் உள்ளனர். ஆனால் இயக்குநராக அறிமுகம் ஆகி நாயகனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு ஏன் விரல்விட்டே எண்ணி விடலாம். அந்த வரிசையில் தமிழ் சினிமாவில் டூரிஸ்ட் ஃபேமிலி என்ற படத்தை எழுதி இயக்கி இயக்குநராக அறிமுகம் ஆனவர் அபிஷன் ஜீவிந்த் (Abishan Jeevinth). இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது . தொடர்ந்து இவர் அடுத்தடுத்து படங்களை இயக்குவார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அபிஷன் ஜீவிந்த் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக நாயகனாக அறிமுகம் ஆனார். அதன்படி வித் லவ் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார்.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்தப் படத்திற்கு பிறகு அவர் படங்களை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்ததாகவும் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் படம் தொடர்பான அப்டேட் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.




அதன்படி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தற்போது நாயகனாக நடித்து வரும் படம் பிக்காசோ. இந்தப் படத்தினை இயக்குநர் கௌதம் சிவராமன் எழுதி இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் மூலமாக அவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் அபிஷன் ஜீவிந்த் உடன் இணைந்து நடிகர்கள் சிவராஜ்குமார், ஷிவானி நகரம், யோகலட்சுமி, கானா வினோத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.
இந்த பிக்காசோ படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வரும் நிலையில் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி இந்த பிக்காசோ படத்தின் முதல் சிங்கிள் இன்று மாலை திரையரங்குகளில் வெளியாக உள்ளது முறிப்பிடத்தக்கது.
Also Read… Mysskin: லோகேஷ் கனகராஜுடன் படம் பண்ணபோறேன் – மிஷ்கின் ஓபன் டாக்!
பிக்காசோ படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
Something exciting is dropping from #Picasso today at 5:30 PM, on @thinkmusicindia ⏳
Stay tuned! ❤️🔥
#Picasso
Starring
@NimmaShivanna @Abishanjeevinth @shivani_nagaram
@IamYogaLakshmii
@GanaVinoth10Written & Directed by
@gowthamsivaram4A @leon_james musical
Produced by
@balaarunachala @DramaCompanyCo Producers : @Karti6kane @GreenGodTales, @Dpictures99
DOP : @pragadeeshdop
Editor : @Editor_Sk_
Art Director : @vijuvijayanvv
Costume Designer : #Swathiramakrishnann
Choreography : #BabaBhaskar @RaghuNorules
Lyrics : #TamizhAadhavan #GanaVinoth
Executive Producer : @Prasanthr0195
Creative Producer : @PSurabe
Publicity Designer : @shynu_mash
PRO : @ProSrivenkatesh#DramaCompany
#DrShivarajkumar #AbishanJeevinth— Drama Company (@dramacompany) November 25, 2026