AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திருச்சியில் கோலாகலமாக நடைபெற்ற தீபத்திருவிழா! வயலூர், ஸ்ரீரங்கம், மலைக்கோட்டையில் சொக்கப்பனை தீபம்

Grand Karthigai Deepam: திருச்சி வயலூர் முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி சொக்கப்பனை கொளுத்தும் வைபவம் நடைபெற்றது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவிலில் நம்பெருமாள் முன்னிலையில் 20 அடி உயர சொக்கப்பனைக்கு தீ மூட்டப்பட்டது. மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே மகா தீபம் ஏற்றப்பட்டதை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருச்சியில் கோலாகலமாக நடைபெற்ற தீபத்திருவிழா! வயலூர், ஸ்ரீரங்கம், மலைக்கோட்டையில் சொக்கப்பனை தீபம்
Image Source: tv9
Deepan
Deepan | Published: 25 Nov 2026 11:30 AM IST

திருச்சி வயலூர் முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா வெகு (Chokkapannai Festival Trichy) விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. வள்ளி, தெய்வானை சமேதராகக் காட்சியளித்த முருகப்பெருமானுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவிலில் நம்பெருமாள் முன்னிலையில் 20 அடி உயர சொக்கப்பனைக்கு தீ மூட்டப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே 273 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த மூன்று கோவில்களிலும் நடைபெற்ற தீபத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Also Read: ஆயிரக்கணக்கான அகல் விளக்குகளின் ஒளியில் ஜொலித்த கோவை ஆதியோகி!

வயலூர் முருகன் கோவிலில் சொக்கப்பனை

திருச்சி வயலூர் முருகன் கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திருப்புகழை உலகிற்கு அளித்த அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் அருள்பாலித்த சிறப்புமிக்க இத்தலத்தில், வள்ளி, தெய்வானை சமேதராகக் காட்சியளித்த முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பரணி தீபம் ஏற்றப்பட்டு, கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனைக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு தீ மூட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீரங்கம் கோவிலில் சொக்கப்பனை வைபவம்

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதாக விளங்கும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவிலில் கார்த்திகை தீபத்திருநாளையொட்டி சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, சுமார் 20 அடி உயரத்தில் பனை ஓலைகளால் அமைக்கப்பட்ட சொக்கப்பனையை வலம் வந்தார். பின்னர் சக்கரத்தாழ்வார் சன்னதி அருகே சொக்கப்பனைக்கு தீ மூட்டப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என பக்தி முழக்கமிட்டு நம்பெருமாளை வழிபட்டனர்.

Also Read: ஆயிரக்கணக்கான அகல் விளக்குகளின் ஒளியில் ஜொலித்த கோவை ஆதியோகி!

மலைக்கோட்டையில் மகா தீபம் ஏற்றம்

திருச்சி மலைக்கோட்டையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. சுமார் 273 அடி உயரமுள்ள மலை உச்சியில் 700 லிட்டர் எண்ணெய் மற்றும் 300 மீட்டர் திரி பயன்படுத்தி தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முன்னதாக தாயுமானவ சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதிலிருந்து தீபச்சுடர் மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த கண்கொள்ளாக் காட்சியைக் காண ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து வழிபட்டனர்.

இந்த மூன்று கோவில்களிலும் நடைபெற்ற தீபத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Follow Us