AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சபரிமலை பக்தர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு… ஆன்லைன் முன்பதிவில் அதிரடி மாற்றம்!

Booking Rules at Sabarimala: சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவுகளில் நடைபெறும் மோசடிகளைத் தடுக்க, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைபேசிக்கு வரும் ஓ.டி.பி. மூலம் மட்டுமே முன்பதிவு செய்யும் புதிய நடைமுறையைத் திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியுள்ளது. முன்பதிவு செய்த குறிப்பிட்ட நாளில் தரிசனத்திற்கு வராத பக்தர்கள் நடப்பு சீசனில் மீண்டும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, பம்பையிலிருந்த உடனடி தரிசன மையமும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சபரிமலை பக்தர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு… ஆன்லைன் முன்பதிவில் அதிரடி மாற்றம்!
Image Source: tv9
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 24 Nov 2026 11:35 AM IST

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆன்லைன் தரிசன முன்பதிவுகளில் (Online Booking) நடைபெறும் முறைகேடுகளைக் கட்டுப்படுத்த திருவிதாங்கூர் தேவஸ்தானம் கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. முன்பதிவு செய்தவர்களில் கணிசமானோர் தரிசனத்திற்கு வராத நிலை தொடர்வதால், சுற்றுலா நிறுவனங்கள் அல்லது இடைத்தரகர்கள் மொத்தமாக முன்பதிவு செய்து ரத்து செய்யாமல் விடுகின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு தேவஸ்தானத் தலைவர் ஜெயக்குமார் மற்றும் ஏ.டி.ஜி.பி. விஜயன் ஆகியோருக்கு தேவஸ்தானத் துறை அமைச்சர் முரளிதரன் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Also Read: கார்த்திகை தீபத்தன்று செல்வம் பெருக இதைத் தெரிஞ்சுக்கோங்க!

ஆதார் சரிபார்ப்பு மற்றும் முன்பதிவுத் தடை

போலி மற்றும் மொத்த முன்பதிவுகளைத் தடுக்க, இனிமேல் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைபேசி எண்ணுக்கு வரும் ஓ.டி.பி. எண்ணை உள்ளீடு செய்தால் மட்டுமே ஆன்லைன் முன்பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்பதிவு செய்த குறிப்பிட்ட நாளில் தரிசனத்திற்கு வராதவர்கள், நடப்பு சீசனில் மீண்டும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அத்தகைய பக்தர்கள் உடனடி தரிசன முன்பதிவு முறையில் தரிசனம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேதி மாற்றம் மற்றும் கூடுதல் அனுமதி

தரிசனத்திற்கு வர இயலாத சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில், முன்பதிவு செய்த நாளுக்கு முன்பாகவே அதை ரத்து செய்யவோ அல்லது தேதியை மாற்றிக்கொள்ளவோ தேவஸ்தானம் வசதி செய்துள்ளது. அதோடு, வருகிற நவம்பர் 30-ஆம் தேதி வரை தினசரி ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையில் கூடுதலாக 5 ஆயிரம் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், பம்பையில் செயல்பட்டு வந்த உடனடி தரிசன முன்பதிவு மையம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: கார்த்திகை தீபத்தன்று செல்வம் பெருக இதைத் தெரிஞ்சுக்கோங்க!

பக்தர்கள் வருகை சரிவால் வருவாய் இழப்பு

நடப்பு மண்டல காலத்தின் முதல் ஆறு நாட்களில் சபரிமலைக்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 46.7 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 5,01,045 பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில், இந்த ஆண்டு விர்ச்சுவல் கியூ முன்பதிவு செய்த பலர் வராததால் 2,71,827 பேர் மட்டுமே தரிசனம் செய்துள்ளனர். சுமார் 2.29 லட்சம் பக்தர்கள் குறைவாக வந்ததால், உண்டியல் காணிக்கை மற்றும் பிரசாத விற்பனை மூலம் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொறுப்புத்துறப்பு: இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வரலாற்றுச் செய்திகள் மற்றும் கோவில் நிர்வாகம் தொடர்பான தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளன. ஆன்மிக நம்பிக்கைகள் மற்றும் வழிபாட்டு மரபுகள் பக்தர்களின் தனிப்பட்ட நம்பிக்கையைப் பொறுத்தவை.

Follow Us