AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரியாத் கோபுரம் மீது ஹூதிக்கள் திடீர் தாக்குதல்.. 2 இந்தியர்கள் உள்பட 11 பேர் காயம்.. வெளியுறவுத்துறை கண்டனம்!

Houthi Attack Riyadh Tower : சவுதி அரேபியாவில் ரியாத் கோபுரம் மீது ஹூதிக்கள் நடத்திய திடீர் தாக்குதலில் 2 இந்தியர்கள் உள்பட 11 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த கோர சம்பவத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

ரியாத் கோபுரம் மீது ஹூதிக்கள் திடீர் தாக்குதல்.. 2 இந்தியர்கள் உள்பட 11 பேர் காயம்.. வெளியுறவுத்துறை கண்டனம்!
ஹூதிக்கள் தாக்குதல் நடத்திய ரியாத் கோபுரம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 25 Nov 2026 11:31 AM IST

சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள கோபுரம் மீது ஹூதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், 2 இந்தியர்கள் உள்பட 11 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இந்தியா தரப்பிலிருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சவுதி அரேபியாவில் பொதுமக்கள், பொருளாதாரம் மற்றும் எரிசக்தி குழு கட்டமைப்புகளை இலக்காக கொண்ட தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் அழைப்பு விடுத்ததோடு, அந்த நாட்டுடன் இந்தியாவின் ஒற்றுமையையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. வெளியுறவு அமைச்சகம் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில், நவம்பர் 24- ஆம் தேதி ரியாத்தில் உள்ள நிதி மாவட்டத்தின் கோபுரங்களில் ஒன்றின் மீது தாக்குதலையும், சவுதி அரேபியா இராட்சியத்தில் பொதுமக்கள், பொருளாதாரம், எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து தொடரும் தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

ரியாத் கோபுர தாக்குதலில் 2 இந்தியர்கள் காயம்

காயமடைந்த 11 பேரில் 2 பேர் இந்தியர்கள் என்பதை உறுதிப்படுத்திய அமைச்சகம், ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாக தெரிவித்தது. ரியாத் நிதி மாவட்டத்தின் மீதான தாக்குதலில் காயம் அடைந்தவர்களில் இரண்டு இந்தியர்களும் அடங்குவர். ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் காயமடைந்தவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது. இத்தகைய தாக்குதல்கள் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாக உள்ளது.

மேலும் படிக்க: உலகில் மீண்டும் அணு ஆயுத போர் நிகழக் கூடாது.. முத்தரப்பு கூட்டத்தில் 3 நாட்டு தலைவர்கள்!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம்

சவுதி அரேபியாவின் இறையாண்மையை மீறுவதாகவும், பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதாகவும் வெளியுறவு அமைச்சகம் மேலும் தெரிவித்தது. இந்த தாக்குதல்கள் பொதுமக்களின் உயிருக்கு கடுமையான ஆபத்தை விளைவிப்பதோடு, சவுதி அரேபியாவின் இறையாண்மையை மீறும் வகையிலும், பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. இதுபோன்ற தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக அதையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவுக்கு இந்தியாவின் ஆதரவு

ரியாத்துக்கு இந்தியாவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய அமைச்சகம் சவுதி அரேபிய இராச்சியத்தின் மக்களுக்கும், அரசாங்கத்துக்கும் நாங்கள் எங்களது உறுதியான ஆதரவை மீண்டும் வலியுறுத்துவதோடு, அதன் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் அதன் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை பேணுவதில் இராச்சியத்துக்கு எங்களது அசைக்க முடியாத ஆதரவையும் மீண்டும் உறுதி படுத்துகிறோம். இந்தப் பகுதியில் அமைதியும், இயல்பு நிலையும் விரைவில் திரும்பும் என்று நாங்கள் மனப்பூர்வமாக நம்புகிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: எல் நினோவின் கடும் தாக்கம்! இந்துகுஷ் இமயமலையில் பனிச்சரிவு- வெள்ளப்பெருக்கு.. வெளியான எச்சரிக்கை!

Follow Us