AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

உலகில் மீண்டும் அணு ஆயுத போர் நிகழக் கூடாது.. முத்தரப்பு கூட்டத்தில் 3 நாட்டு தலைவர்கள்!

China Trilateral Mmeeting : உலகில் மீண்டும் அணு ஆயுத போர் நிகழக் கூடாது என்றும், அது நிகழ வாய்ப்பு இல்லை என்றும் சீனாவில் நடந்த முத்தரப்பு கூட்டத்தில் டிரம்ப், ஷி ஜின்பிங், விளாடிமிர் புதின் ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர் .

உலகில் மீண்டும் அணு ஆயுத போர் நிகழக் கூடாது.. முத்தரப்பு கூட்டத்தில் 3 நாட்டு தலைவர்கள்!
டிரம்ப், ஷி ஜின்பிங், விளாடிமிர் புதின்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 19 Nov 2026 19:07 PM IST

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனா அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் சீனாவின் தெற்கு நகரமான ஷென்செனில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற முத்தரப்பு கூட்டத்தில் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து, அணுசக்தி அபாயங்களை குறைப்பது, அணு ஆயுத பரவலை தடுப்பது, உலகளாவிய மூலோபாய நிலைத்தன்மையை பேணுவது ஆகியவற்றை நோக்கி இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டு, ஒரு கூட்டு அமைதி பிரகடனத்தை ஏற்றனர். ஆசிய- பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் இடையே, சுமார் 90 நிமிடங்கள் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு வெளியிடப்பட்ட இந்த பிரகடனம் அணு ஆயுதப் போரில் வெற்றி பெற முடியாது, அது ஒருபோதும் நடைபெறக்கூடாது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியது. அணுசக்தி அபாயங்களை குறைப்பதற்கும், அணு ஆயுத பரவலை தடுப்பதற்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று 3 நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையில் சீர் திருத்தம்

உலகளாவிய சவால்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை மேலும் திறம்பட பதில் அளிக்கும் வகையில், அதில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள தலைவர்கள் உறுதி அளித்துள்ளனர். சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களின் உற்பத்தியையும், விநியோகத்தையும் அதிகரிக்க ஒப்பு கொண்டதோடு, நிலையான எரிசக்தி ஓட்டத்தை பேணுவதன் முக்கியத்துவத்தையும் மீண்டும் வலியுறுத்தினர். அதுமட்டுமின்றி சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குறித்த தலைவர்களின் நிலைப்பாடு மற்றும் அது போன்ற சர்வதேச அமைப்புகள் தங்களது அதிகார வரம்பை தவறாக பயன்படுத்தக் கூடாது என்று கூறிய இரு நாடுகளும், அரசின் ஒப்புதல் மற்றும் அரசு அதிகாரிகளுக்கான சட்ட பாதுகாப்பின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தியது.

மேலும் படிக்க: வயது 23.. சாதனை உலகளவில்.. கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த ஜப்பானின் செல்லப்பிள்ளை பூட்டா!

அமெரிக்க அதிபரின் முயற்சிக்கு பாராட்டுகள்

உக்ரைனில் நடந்ததாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பாக நீதிமன்றத்தால் தேடப்படும் புதினுக்கு இந்த ஏற்பாடு குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இருந்தாலும், கலந்துரையாடல்களின் போது, உக்ரைன் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் எழுப்பியதாக ட்ரம் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து பேசிய புதின், பேச்சுவார்த்தைகள் வெளிப்படைத் தன்மை ஆகவும், நேர்மையாகவும் இருந்தது. அவை மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகவும் தெரிவித்தார். பல்வேறு விஷயங்களில் தனக்கும், ட்ரம்புக்கு பொதுவான கருத்துக்கள் இருப்பதாக கூறிய அவர், உக்ரைன் போர் உள்பட சர்வதேச மோதல்களை தீர்ப்பதற்கான அமெரிக்க அதிபரின் முயற்சிகளை பாராட்டினார்.

அணு ஆயுத பரவல் தடுப்பு சட்டம் சீர் திருத்தம்

ஜனாதிபதி ட்ரம் உண்மையாகவே மோதல்களை தீர்க்க முயல்கிறார் என்பதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், அணு ஆயுத பரவல் தடுப்பு மற்றும் கடல்சார் சட்டம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்படக் கூடிய சீர்திருத்தங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக ரஷ்ய அதிபர் மேலும் தெரிவித்தார்.

மேலும் படிக்க: இலங்கைக்கு ரூ. 60 லட்சம் பீடி இலைகள் கடத்தல் முயற்சி.. சினிமா பாணியில் நடந்த சேஷிங்.. 2 பேரை தூக்கிய க்யூ பிரிவு போலீஸ்!

Follow Us