AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சர்வதேச ஆண்கள் தினம் இன்று: ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன?

International Men's Day: ஆண்களின் நலன், பாதுகாப்பு மற்றும் சமத்துவத்தை வலியுறுத்தும் சர்வதேச ஆண்கள் தினம் ஆண்டுதோறும் நவம்பர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் குறித்து பேசப்படுவதைப் போலவே, ஆண்கள் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த நாள் எடுத்துரைக்கிறது.

சர்வதேச ஆண்கள் தினம் இன்று: ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன?
Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 19 Nov 2026 12:00 PM IST

சர்வதேச ஆண்கள் தினம் ஆண்டுதோறும் நவம்பர் 19ஆம் தேதி ஆண்களின் நலன், பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை (International Men’s Day) ஏற்படுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது. குடும்ப வன்முறை, வீடற்ற நிலை, மன அழுத்தம், தற்கொலை உள்ளிட்ட ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆண்களின் உடல் மற்றும் மனநலம், பாலின சமத்துவம், குடும்பப் பங்களிப்பு ஆகியவற்றை அங்கீகரித்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே இத்தினத்தின் நோக்கமாகும். ஆண் – பெண் சமத்துவத்தை மேம்படுத்துதல் மற்றும் அனைவரும் பாதுகாப்பாக வாழக்கூடிய சமூகத்தை உருவாக்குதல் ஆகியவையும் இதன் முக்கிய நோக்கங்களாகும்.

Also Read: வீட்டுக்குள்ளேயே ஒரு இயற்கை உலகம்! அசத்தும் இந்திய வீடுகளின் அழகிய முற்றங்கள்!

ஆண்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம்

குடும்ப வன்முறை, பாலியல் துன்புறுத்தல், வீடற்ற நிலை, தற்கொலை எண்ணங்கள், மன அழுத்தம் மற்றும் சமூகப் பாகுபாடு உள்ளிட்ட பல்வேறு சவால்களை ஆண்களும் எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, ஆண்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடாது, எப்போதும் தைரியமாக இருக்க வேண்டும் என்ற சமூக எதிர்பார்ப்புகள் அவர்களின் மனநலனைப் பாதிக்கக்கூடும். இத்தகைய பிரச்சினைகளை வெளிப்படையாகப் பேசுவதற்கும், அவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்குவதற்கும் இந்த நாள் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.

சர்வதேச ஆண்கள் தினத்தின் ஆறு முக்கிய நோக்கங்கள்

சர்வதேச ஆண்கள் தினம் ஆறு முக்கியக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு கொண்டாடப்படுகிறது. சமூகத்தில் நல்ல முன்னுதாரணமாகத் திகழும் ஆண்களை அடையாளம் கண்டு பாராட்டுவது, குடும்பம் மற்றும் சமூக வளர்ச்சியில் ஆண்களின் பங்களிப்பை அங்கீகரிப்பது, அவர்களின் உடல் மற்றும் மனநலனுக்கு முக்கியத்துவம் அளிப்பது ஆகியவை இதில் அடங்கும். மேலும், ஆண்களுக்கு எதிரான பாகுபாடுகளைச் சுட்டிக்காட்டுதல், ஆண் – பெண் சமத்துவத்தை மேம்படுத்துதல் மற்றும் அனைவரும் பாதுகாப்பாக வாழக்கூடிய சமூகத்தை உருவாக்குதல் ஆகியவையும் இதன் முக்கிய நோக்கங்களாகும்.

ஆண்களின் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு

பொதுவாகப் பல ஆண்கள் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் மருத்துவ ஆலோசனை பெறுவதைத் தாமதப்படுத்துகின்றனர். மனநலப் பிரச்சினைகளையும் வெளிப்படையாகப் பகிராமல் மனதிற்குள்ளேயே வைத்துக்கொள்கின்றனர். எனவே, முறையான மருத்துவப் பரிசோதனைகள், ஆரோக்கியமான வாழ்க்கை முறை, மனநல ஆலோசனை மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு ஆகியவற்றின் அவசியத்தை இந்த நாள் வலியுறுத்துகிறது.

Also Read: வீட்டுக்குள்ளேயே ஒரு இயற்கை உலகம்! அசத்தும் இந்திய வீடுகளின் அழகிய முற்றங்கள்!

சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதே நோக்கம்

சர்வதேச ஆண்கள் தினம் என்பது ஆண்களைக் கொண்டாடுவதற்கான ஒரு நாள் மட்டுமல்ல; அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு தீர்வுகளை உருவாக்குவதற்கான வாய்ப்புமாகும். ஆண்களின் சாதனைகள், குடும்பப் பொறுப்புகள், குழந்தை வளர்ப்பில் அவர்களின் பங்களிப்பு உள்ளிட்டவற்றை அங்கீகரிப்பதுடன், ஆண்களும் பெண்களும் பரஸ்பர மரியாதையுடன் வாழும் சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதே இந்த நாளின் அடிப்படை நோக்கமாகும்.

Follow Us