AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தமிழக வெற்றிக் கழக அரசின் செயல்பாடுகள் வெட்கக்கேடானவை! – எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

EPS Slams CM Vijay: டெல்லி சென்ற முதலமைச்சர் விஜய், மேகதாது அணை விவகாரம் குறித்து ஏன் பேசவில்லை எனக் கேள்வி எழுப்பினார். டெல்லியில் மூத்த காங்கிரஸ் தலைவர்களிடம் இந்த விவகாரம் தொடர்பாகப் பேசியிருக்க வேண்டும் என்றும், சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றபோது கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரைச் சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தியிருக்கலாம் என்றும் கூறினார்.

தமிழக வெற்றிக் கழக அரசின் செயல்பாடுகள் வெட்கக்கேடானவை! – எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 19 Nov 2026 11:58 AM IST

நவம்பர் 19, 2026: தமிழக வெற்றிக் கழக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் எல்லை மீறிச் செல்வதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். மேலும், மேகதாது அணை விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லி சென்ற முதலமைச்சர் மேகதாது குறித்து பேசாதது ஏன்?

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் செயல்பாடுகள் வெட்கக்கேடானதாக இருப்பதாகத் தெரிவித்தார். தவெக அரசின் ஆறு மாத கால ஆட்சியை மக்கள் கேலி செய்து வருவதாகவும் விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், டெல்லி சென்ற முதலமைச்சர் விஜய், மேகதாது அணை விவகாரம் குறித்து ஏன் பேசவில்லை எனக் கேள்வி எழுப்பினார். டெல்லியில் மூத்த காங்கிரஸ் தலைவர்களிடம் இந்த விவகாரம் தொடர்பாகப் பேசியிருக்க வேண்டும் என்றும், சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றபோது கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரைச் சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தியிருக்கலாம் என்றும் கூறினார். அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முதலமைச்சர் தவறிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும் படிக்க: பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டதா?.. உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு; விரைவில் விசாரணை!!

மேலும், குற்றங்களைத் தடுக்க வேண்டிய காவல்துறையினர் புள்ளிவிவரங்களை வெளியிட்டுக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தமிழக மக்களின் பிரச்சினைகள் குறித்து முதலமைச்சர் விஜய் பொதுவெளியில் பேச வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேகதாது அணை விவகாரத்தில் தொடரும் சர்ச்சை

இதற்கிடையே, கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் என்றும், அதற்கு தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என்றும் சமீபத்தில் தெரிவித்திருந்தார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே முதன்மையானது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதில் தீவிரம் காட்டி வரும் நிலையில், அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி முதலமைச்சர் விஜய் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார். இருப்பினும், அணையைக் கட்டியே தீருவோம் என கர்நாடக அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

மேலும் படிக்க: 3 வயது சிறுவனின் கைகளை கட்டிப்போட்டு தாக்குதல்.. திருத்துறைப்பூண்டி தனியார் பள்ளியில் அரங்கேறிய ஷாக் சம்பவம்..

மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்குக் காவிரி நீர் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படுவதுடன், விவசாயமும் கடுமையாகப் பாதிக்கப்படும் என தமிழக விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், காவிரி தொழில்நுட்பப் பிரிவின் துணைத் தலைவர் பதவி பல மாதங்களாகக் காலியாக இருப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என வீதலீடர் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை சுட்டிக்காட்டியிருந்தார்.

 

Follow Us