AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“சென்னையில் வாகனச் சோதனையில் சிக்கிய மெகா கடத்தல்!”.. ரூ.140 கோடி மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியது; இருவர் கைது!

Heroin Worth 70 Kg Seized Near Madhavaram in Chennai: சென்னை மாதவரம் அருகே வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் நடத்திய வாகனச் சோதனையில், ரூ.140 கோடி மதிப்பிலான 70 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு அடையாறு அலுவலகத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

“சென்னையில் வாகனச் சோதனையில் சிக்கிய மெகா கடத்தல்!”.. ரூ.140 கோடி மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியது; இருவர் கைது!
போலீஸ் சாதனை
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 19 Nov 2026 10:36 AM IST

சென்னை, நவ.19: சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டைத் தடுக்கப் பல்வேறு சட்ட அமலாக்க அமைப்புகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னை மாதவரம் அருகே வருவாய் புலனாய்வு இயக்குநரக (DRI) அதிகாரிகள் நடத்திய அதிரடி வாகனச் சோதனையில், ரூ.140 கோடி மதிப்பிலான 70 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையில், கடத்தல் வாகனம் மடக்கிப் பிடிக்கப்பட்டுப் பெருமளவு போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: இனி காவல் நிலையங்களுக்கு அலைய வேண்டியதில்லை.. “மொபைலில் புகார்.. உடனே e-CSR எண்!”.. டிஜிபி வெளியிட்ட அறிவிப்பு!

ரூ.140 கோடி சந்தை மதிப்பும், இருவர் கைதும்:

வாகனச் சோதனையின் போது வாகனத்தில் இருந்த 70 கிலோ ஹெராயின் போதைப்பொருளை அதிகாரிகள் உடனடியாகப் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட இந்த 70 கிலோ ஹெராயினின் சந்தை மதிப்பு ஒரு கிலோவுக்கு ரூ.2 கோடி என்ற கணக்கீட்டின் அடிப்படையில் ரூ.140 கோடி என முதலில் மதிப்பிடப்பட்ட நிலையில், சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.150 கோடி வரை இருக்கக்கூடும் என அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக வாகனத்தில் பயணித்த இரண்டு நபர்களை அதிகாரிகள் கைது செய்து சட்டரீதியான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர்.

அடையாறு அலுவலகத்தில் தீவிர விசாரணை:

கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களிடமும் அடையாறு பகுதியில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் வைத்து அதிகாரிகள் தொடர்ச்சியான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பெருமளவு ஹெராயின் போதைப்பொருள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, எங்குக் கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டிருந்தது மற்றும் இந்தக் கடத்தல் கும்பலின் பின்னணியில் வேறு யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்துத் துருவித் துருவி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க: மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு.. வெளிவராத பல ரகசியங்கள்.. நிஷாந்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு தாக்கல்!

கடத்தல் வலையமைப்பை கண்டறிய தொடரும் நடவடிக்கை:

சென்னையின் முக்கியப் பகுதியில் ரூ.140 கோடி மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியிருப்பது கடத்தல் கும்பல்களின் நகர்வுகள் குறித்துக் கவனத்தை ஈர்த்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில், இந்தக் கடத்தல் வலையமைப்பில் ஈடுபட்டுள்ள இதர நபர்களைக் கண்டறியவும், தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தவும் அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow Us