AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Cyclone Akvan: தமிழகத்தை விட்டு விலகிய அக்வான் புயல்.. சென்னைக்கு அடுத்த மழை எப்போது? பிரதீப் ஜான் தகவல்

Chennai Rains: சென்னையில் அடுத்ததாக நவம்பர் 22, 23 மற்றும் 26, 27 ஆகிய தேதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார். கிழக்குத் திசைக் காற்றின் வேகம் அதிகரிப்பதன் காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் சில மாவட்டங்களில் இந்த நாட்களில் நல்ல மழை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cyclone Akvan: தமிழகத்தை விட்டு விலகிய அக்வான் புயல்.. சென்னைக்கு அடுத்த மழை எப்போது? பிரதீப் ஜான் தகவல்
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 19 Nov 2026 07:41 AM IST

நவம்பர் 19, 2026: வங்கக்கடலில் உருவாகியுள்ள அக்வான் புயல் தமிழகத்தை விட்டு முழுமையாக விலகிச் செல்வதால், வடகிழக்கு கடலோர தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை வாய்ப்பு இல்லை என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதேசமயம், சென்னையில் நவம்பர் 22, 23 மற்றும் 26, 27 ஆகிய தேதிகளில் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு நோக்கி நகரும் அக்வான் புயல்!

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள நவம்பர் 19ஆம் தேதி அதிகாலை 2.30 மணி நிலவரப்படி, தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ள அக்குவான் புயல், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்துள்ள இந்தப் புயல், நர்சாபூரில் இருந்து சுமார் 470 கி.மீ. கிழக்கு தென்கிழக்கிலும், காளிங்கப்பட்டினத்தில் இருந்து 490 கி.மீ. தெற்கு தென்கிழக்கிலும், சென்னையில் இருந்து 570 கி.மீ. கிழக்கு வடகிழக்கிலும் நிலை கொண்டுள்ளது.

மேலும் படிக்க: மகளிர் உரிமைத் தொகையில் பாதிப் பேர் நீக்கமா?.. பரபரப்பு புகார்களுக்கு தமிழக அரசு விளக்கம்!

இந்தப் புயல் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 20ஆம் தேதி நண்பகலுக்குள் ஆந்திராவின் வடக்கு கடலோரப் பகுதிகள் மற்றும் ஒடிசாவின் தெற்குப் பகுதிகளுக்கு இடையே நர்சாபூர் முதல் பூரி வரையிலான பகுதியில் கரையைக் கடக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அப்போது மணிக்கு 90 முதல் 100 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 110 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்திற்கு மழை வாய்ப்பு இல்லை

முன்னதாக, அக்வான் புயலின் தாக்கத்தால் நவம்பர் 17ஆம் தேதி இரவு முதல் நவம்பர் 20ஆம் தேதி வரை தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புயல் தனது பாதையை மாற்றி ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்வதால் தமிழகத்திற்கான மழை வாய்ப்பு குறைந்துள்ளது.

மேலும் படிக்க: சென்னைக்கு நோ மழை.. தென் மாவட்டங்களில் மட்டுமே மழை இருக்கும் – வானிலை ரிப்போர்ட் இதோ..

இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அக்வான் புயல் தமிழகத்தை விட்டு விலகிச் சென்றுவிட்டதால் வடகிழக்கு கடலோர தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

சென்னைக்கு அடுத்த மழை எப்போது?


இதற்கிடையே, சென்னையில் அடுத்ததாக நவம்பர் 22, 23 மற்றும் 26, 27 ஆகிய தேதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார். கிழக்குத் திசைக் காற்றின் வேகம் அதிகரிப்பதன் காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் சில மாவட்டங்களில் இந்த நாட்களில் நல்ல மழை பதிவாகக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Follow Us