AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கிணற்றில் சடலமாக கண்டெடுப்பு.. கரூரை உலுக்கிய பெரும் சோகம்!

Karur Tragedy incident: கரூர் மாவட்டம் நெரூர் அருகே சின்னக்காளிப்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ராமசாமி, ஜானகி, மகள் சுகுணா மற்றும் சுகுணாவின் இரு குழந்தைகள் என 5 பேர் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பப் பிரச்சனையா அல்லது வேறு காரணமா என வாங்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கிணற்றில் சடலமாக கண்டெடுப்பு.. கரூரை உலுக்கிய பெரும் சோகம்!
கிணற்றில் கிடந்த சடலங்கள்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 19 Nov 2026 07:53 AM IST

கரூர், நவ.19: தமிழகத்தில் தொடரும் குடும்பப் பிரச்சனைகள் மற்றும் மன உளைச்சல்கள் சில நேரங்களில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்புகளையும், நெஞ்சை உலுக்கும் சோகங்களையும் ஏற்படுத்தி விடுகின்றன. அந்த வகையில், கரூர் மாவட்டம் நெரூர் அருகே உள்ள சின்னக்காளிப்பாளையம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த மாவட்டத்தையும் பேரதிர்ச்சியிலும் ஆழ்ந்த சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. கணவன், மனைவி, மகள் மற்றும் மகளின் இரண்டு பிஞ்சுக் குழந்தைகள் என ஐந்து உயிர்கள் ஒரே நேரத்தில் பறிபோன இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கலக்கத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: தூத்துக்குடியில் கூகுள் பே வால் ஏற்பட்ட தகராறு.. விலக்கி விட சென்ற பால் பண்ணை உரிமையாள் கொலை.. ஒருவர் கைது!

கிணற்றில் சடலங்கள் கண்டறியப்பட்ட விவரம்:

சின்னக்காளிப்பாளையத்தைச் சேர்ந்த ராமசாமி, அவரது மனைவி ஜானகி, இவர்களது மகள் சுகுணா மற்றும் சுகுணாவின் மகன், மகள் ஆகிய ஐந்து பேரும் குடும்பப் பிரச்சனை காரணமாக அருகிலிருந்த கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. வீட்டில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் யாரையும் காணாததால் உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். அப்போது அருகிலிருந்த கிணற்றில் அவர்கள் சடலமாகக் கிடப்பது தெரியவந்ததை அடுத்து, உடனடியாகக் காவல்துறையினருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்புத் துறை, காவல்துறையின் மீட்புப் பணிகள்:

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கரூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் வாங்கல் போலீசார், கிணற்றில் இறங்கி மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி கிணற்றில் மிதந்து கொண்டிருந்த ஐந்து பேரின் உடல்களையும் ஒவ்வொன்றாகப் பாதுகாப்பாக வெளியே மீட்டனர். அதனைத் தொடர்ந்து, மீட்கப்பட்ட ஐந்து உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காகவும் சட்டரீதியான நடைமுறைகளுக்காகவும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதையும் படிக்க: மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு.. வெளிவராத பல ரகசியங்கள்.. நிஷாந்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு தாக்கல்!

போலீசார் மேற்கொண்டு வரும் தீவிர விசாரணை:

குடும்பப் பிரச்சனை காரணமாக இந்தக் குடும்பத்தினர் தற்கொலை முடிவை எடுத்தார்களா அல்லது வேறு ஏதேனும் பின்னணி காரணங்கள் உள்ளனவா என்ற கோணத்தில் வாங்கல் காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்த இந்தச் சோகம் சின்னக்காளிப்பாளையம் கிராமத்தையே சோகத்தில் மூழ்கடித்துள்ளது.

Follow Us