AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக்பாஸில் லக்‌ஷ்மி பிரியா மீதான வன்மத்தை கொட்டும் போட்டியாளர்கள் – வெளியானது வீடியோ!

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் தற்போது 11-வது வாரம் விறுவிறுப்பாக சென்றுகொண்டு இருக்கின்றது. இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் நடைபெறும் டாஸ்க் ஒன்றில் லக்‌ஷ்மி பிரியா மீதான வன்மத்தை போட்டியாளர்கள் கொட்டித் தீர்க்கின்றனர்.

பிக்பாஸில் லக்‌ஷ்மி பிரியா மீதான வன்மத்தை கொட்டும் போட்டியாளர்கள் – வெளியானது வீடியோ!
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 19 Nov 2026 10:26 AM IST

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெறும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10) நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 74 நாட்களை எட்டியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் ட்2026-ம் ஆண்டு தொடங்கிய இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கின்றது. இந்த விறுவிறுப்பு போட்டியாளர்கள் மேடையில் இருந்து பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதில் இருந்தே தொடங்கியது. தொடர்ந்து வீட்டில் உள்ள ஒவ்வொரு நாளும் போட்டியாளர்களுக்கு சவால்கள் அதிக அளவில் கொடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த் அணைந்து சவால்களையும் கடந்து தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் டாப் 10 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். தற்போது போட்டி இன்னும் அதிகமாக சூடு பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்த 11-வது வாரம் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் டிக்கெட் டு ஃபினாலே பில்டப் டாஸ்க் வழங்கப்பட்டு தொடர்ந்து நட்டைப்பெற்று வருகின்றது. அந்த டாஸ்கின் ஒரு பகுதியாக தற்போது கடவுள் பாதி மிருகம் பாதி என்ற டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒரு போட்டியாளர் அரியணையில் அமரும் போது மற்றவர்கள் அவரை பேசியே கீழே இறக்க வேண்டும்.

பிக்பாஸில் லக்‌ஷ்மி பிரியா மீதான வன்மத்தை கொட்டும் போட்டியாளர்கள்:

இந்த டாஸ்கிற்காக லக்‌ஷ்மி பிரியா இன்று அரியணையில் ஏறி அமர்ந்துள்ள நிலையில் வீட்டில் உள்ள போட்டியாளர்களான ஜேசன், சாதிகா மற்றும் முனியம்மாள் ஆகியோர் மாறிமாறி அவரை சரமாறியாம கேள்வி கேட்கிறார்கள். அவர்கள் லக்‌ஷ்மி பிரியா மீது வைத்து இருந்த வன்மத்தையும் வெளிப்படையாக கொட்டித் தீர்க்கிறார்கள். இது தொடர்பான வீடியோவை பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… Dhanush: ஆடுகளம் பட ஷூட்டிங்கின்போது எனக்கு இருந்த சேலஞ் அதுதான் – தனுஷ் வெளிப்படையாக சொன்ன விஷயம்!

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… கடவுள் பாதி மிருகம் பாதி… பிக்பாஸில் டாஸ்கின் போது கடுப்பான முனியம்மாள் – வைரலாகும் வீடியோ!

Follow Us