AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Ajith Kumar: ரௌடியா? டேர் டெவில் படத்தில் அஜித் குமாரின் லுக் இதுவா? இணையத்தில் வைரலாகும் போட்டோ!

Dare Devil Shooting Photo: தமிழில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவரின் இயக்கத்தில் தமிழில் தற்போது உருவாக்கப்பட்டுவரும் திரைப்படம்தான் டேர் டெவில். இதில் தல அஜித் குமார் ஹீரோவாக நடித்துவரும் நிலையில், இப்படத்தின் லுக்கில் அவர் இயக்கம் புகைப்படம் ஓன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

Ajith Kumar: ரௌடியா? டேர் டெவில் படத்தில் அஜித் குமாரின் லுக் இதுவா? இணையத்தில் வைரலாகும் போட்டோ!
டேர் டெவில்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 18 Nov 2026 21:33 PM IST

நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இறுதியாக குட் பேட் அக்லி (Good Bad Ugly) என்ற திரைப்படமானது வெளியாகி அஜித்திற்கு பிரம்மாண்ட வரவேற்பை கொடுத்திருந்தது. இந்த படத்திற்கு பிறகு அஜித் மற்றும் குட் பேட் அக்லி பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Director Adhik Ravichandran) கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த கூட்டணியில் உருவாகிவரும் புத்தம் புதிய திரைப்படம்தான் டேர் டெவில் (Dare Devil Movie). இதில் அஜித் குமார் ஹீரோவாக நடிக்க, அவருடன் பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துவருகிறார்கள்.

அஜித் குமார், கார் ரேஸ் பயிற்சியை விட்டுவிட்டு தற்போது படத்தில் நடிக்கும் பணியில் தீவிரமாக உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே தொடங்கி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. அந்த விதத்தில் இப்படத்தில் அஜித் எப்படிப்பட்ட தோற்றத்தில் இருக்கிறார் என்பது தொடர்பான புகைப்படம் ஓன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: அதில் நான் தவறான முடிவுகளை எடுத்துவிட்டேன் – மனம் திறந்த ஸ்ரீலீலா!

டேர் டெவில் பட லுக்கில் அஜித் இருக்கும் புகைப்படம் குறித்து வைரலாகும் எக்ஸ் பதிவு:

இந்த புகைப்படத்தில் நடிகர் அஜித் குமார், கட்டம்போட்ட சட்டை, ஜீன்ஸ் பேண்ட் அணிந்தபடியும். கை மற்றும் கழுத்தில் கயிறு காட்டியபடி இருக்கிறார். மேலும் தனது கழுத்து அஜித் குமார் ஒரு ரௌடியை போல கைக்குட்டையை கட்டியிருப்பதுபோல இருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு ரௌடி கெட்டப்பில் அஜித் இருப்பதுபோல இந்த புகைப்படத்தில் உள்ளது.

இதையும் படிங்க: எந்த தைரியத்துல என்ன வில்லனா நடிக்க சொல்ற? மம்முட்டி குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த தயாரிப்பாளர் தனஞ்செயன்!

குட் பேட் அக்லி படத்திலும் நடிகர் அஜித் ரௌடி வேடத்தில் நடித்திருந்த நிலையில், தற்போது உருவாகிவரும் டேர் டெவில் படத்திலும் ரௌடியாகவே அஜித் நடிப்பதாக தெரிகிறது. ஆனால் இந்த படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.

அஜித் குமாரின் டேர் டெவில் படத்தில் இணைந்த நடிகர்கள்:

இந்த டேர் டெவில் படத்தில் அஜித் குமார் ஹீரோவாக நடிக்க, நடிகை ஸ்ரீலீலா நாயகியாக நடிக்கிறாராம். மேலும் இப்படத்தில் மெயின் வில்லனாக கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் மலையாள நடிகர் உன்னி முகுந்தன், ஆர். பார்த்திபன், பிரபு, ராதிகா சரத்குமார், யோகி பாபு உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்களும் இப்படத்தில் இணைந்து நடித்துவருவதாக கூறப்படுகிறது. அந்த விதத்தில் இப்படம் அஜித்திற்கு பிரம்மாண்ட வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us