ஓ.எம் பட காலை 6 மணி FDFS.. தமிழக முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்து தனுஷ் வெளியிட்ட பதிவு!
Dhanush Thanks CM Vijay: தென்னிந்திய சினிமாவில் மிகவும் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் தனுஷ். இவரின் நடிப்பில் தமிழில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் திரைப்படம்தான் ஓ.எம். இந்த படமானது 2026 நவம்பர் 20ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், 6 மணி FDFS -க்கு அனுமதி கொடுத்த தமிழக முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்து தனுஷ் எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார்.
கோலிவுட் சினிமாவில் மக்களிடையே கொண்டாடப்படும் நாயகனாக இருந்துவருபவர் தனுஷ் (Dhanush). இவரின் நடிப்பில் தமிழில் இதுவரையில் கிட்டத்தட்ட 54 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இறுதியாக வெளியான திரைப்படம்தான் கர (Kara Movie). இந்த படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்க, வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்திற்கு பிறகு தனுஷ் நடித்துவந்த 55வது திரைப்படம்தான் ஓ.எம் (O.M Movie). இந்த படத்தை அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி (Director Rajkumar Periasamy) இயக்க, தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்.டேக் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க, மம்முட்டி (Mammootty), சாய் பல்லவி (Sai Pallavi) மற்றும் ஸ்ரீலீலா (Sreeleela) இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது.
அதை முன்னிட்டு இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் எல்லாமே சிறப்பாக நடைபெற்றுவருகிறது. அந்த விதத்தில் தனுஷின் ஓ.எம் திரைப்படமானது தமிழகத்தில் காலை 6 மணி முதல் திரையிடப்படுகிறது. இந்நிலையில் அதற்கு அனுமதி கொடுத்த தமிழக முதல்வர் விஜய்க்கு (CM Vijay) நன்றி தெரிவித்து, நடிகர் தனுஷ் பதிவை வெளியிட்டுள்ளார்.




இதையும் படிங்க: புலி பட இயக்குநரின் நவோரியா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
தமிழக முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்து தனுஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
https://t.co/hvTcIQo8vq
— Dhanush (@dhanushkraja) November 18, 2026
இந்த பதிவில் நடிகர் தனுஷ், “ஒரு படத்தின் வெற்றி என்பது பல்வேறு துறைகள் சேர்ந்து, பலரின் கூட்டு உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும் உருவாகுவது. திரைத்துறையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் நீங்கள் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய ஆதரவு, தியேட்டர்களுக்கு சென்று படங்களைப் பார்ப்பதும், அதன் மூலம் சினிமாவின் வளர்ச்சிக்குப் பங்களிப்பதும்தான். 2026 வரும் நவம்பர் 20ஆம் தேதி வெளியாகவிருக்கும் ஓ.எம் திரைப்படத்தின் காலை 6 மணி காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசிற்கும், மரியாதைக்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இதையும் படிங்க: ஹாய் சாதிகா… கேள்விகளால் சாதிகாவை மிரளவைத்த லக்ஷ்மி பிரியா – வைரலாகும் ப்ரோமோ!
அதிகாலை 6 மணி ஷோவுக்கு வருகை தரும் ரசிகர்கள் அனைவரும் பாதுகாப்புடனும், பொறுப்புடனும், அடுத்தவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும் நடந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் திரைப்படத்தைப் பார்த்து மகிழ்வதே உண்மையாள கொண்டாட்டம்” என தனுஷ் நன்றி தெரிவித்து பதிவை பகிர்ந்துள்ளார். தனுஷின் ஓ. எம் திரைப்படமானது காலை 6 மணி FDFS ஷோவாக உலகமெங்கும் வெளியாக காத்திருக்கும் நிலையில், நிச்சயம் இந்த் 2026ல் தனுஷிற்கு சிறப்பான வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.