AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Dhanush: ஆடுகளம் பட ஷூட்டிங்கின்போது எனக்கு இருந்த சேலஞ் அதுதான் – தனுஷ் வெளிப்படையாக சொன்ன விஷயம்!

Dhanush Acting Challenges in Aadukalam Movie: தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் தனுஷ். இவரின் நடிப்பில் பான் இந்திய மொழிகளிலும் தொடர்ந்து திரைப்படங்கள் உருவாகிவருகிறது. இந்நிலையில் முன்பு நேர்காணல் ஒன்றில் பேசிய தனுஷ், ஆடுகளம் பட ஷூட்டிங்கின்போது இருந்த சவால்கள் குறித்து வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

Dhanush: ஆடுகளம் பட ஷூட்டிங்கின்போது எனக்கு இருந்த சேலஞ் அதுதான் – தனுஷ் வெளிப்படையாக சொன்ன விஷயம்!
தனுஷ் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 18 Nov 2026 08:25 AM IST

தென்னிந்திய திரைத்துறையில் மக்களிடையே கொண்டாடப்பட்டுவரும் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் தனுஷ் (Dhanush). இவர் தனது தந்தையான இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் (Director Kasthuri Raja) திரைப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானார். 2002ம் ஆண்டில் தமிழில் வெளியான “துள்ளுவதோ இளமை” (Thulluvadho Ilamai) என்ற படத்தின் மூலம் ஹீரோவாக நுழைந்தார். இப்படத்தை இயக்குநர் கஸ்தூரி ராஜா இயக்கியதாக கூறப்பட்டாலும், இதில் நடிகரும், இயக்குநரும் மற்றும் தனுஷின் சகோதரனுமான செல்வராகவன் இயக்கியுள்ளதாக என கூறப்படுகிறது. இந்த படம் தனுஷுக்கு முதல் படமாக அமைந்த நிலையில், எதிர்பார்த்திருந்த வரவேற்பை பெறவில்லை. இந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் தனுஷ் நடிக்க தொடங்கியிருந்தார்.

தற்போதுவரை இவரின் நடிப்பில் மொத்தமாக 54 திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த தனுஷ், ஆடுகளம் திரைப்படத்தின் (Aadukalam Movie) ஷூட்டிங்கின்போது இருந்த சவாலான விஷயங்கள் குறித்து வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: இயக்குநர் சங்கரின் அந்தப் படத்தை யாஷ் 5 முறை தியேட்டரில் பார்த்துள்ளார் – தயாரிப்பாளர் சொன்ன விசயம்

ஆடுகளம் படத்தில் இருந்த சவால்கள் குறித்து ஓபனாக பேசிய தனுஷ்:

அந்த நேர்காணலில் தனுஷிடம் ஆடுகளம் படத்தின் ஷூட்டிங்கின்போது உங்களுக்கு இருந்த சேலஞ் என்ன என கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த தனுஷ், “ஆடுகளம் திரைப்படத்தை பொறுத்தவரைக்கும் எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது, மதுரையில் உள்ள நபராக நடிப்பது. இந்த படத்தில் என்னையும், கிஷோரையும் தவிர மற்ற எல்லா நடிகர்களும் மதுரையை பூர்விகமாக கொண்ட நடிகர்களாக இருந்தவர்கள். முக்கால்வாசி நபர்கள் மதுரையில் உள்ளவர்களாக தேர்ந்தெடுத்து நடிகை வைக்கப்பட்டவர்கள்.

இதையும் படிங்க: எனது ஆல் டைம் ஃபேவரட் சாப்பாடு அதுதான் – சாய் பல்லவி சொன்ன விஷயம்!

அதனை நபர்கள் மத்தியில் ஒரு நடிகராக மற்றும் ஒரு நட்சத்திரமாக தெரியாமல் இருப்பதே பெரிய சவாலாக இருந்தது. மேலும் அப்படத்தில் ஆக்ஷனும் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. என்னுடன் நடித்த அனைவரும் மதுரை மக்கள், அவர்களுடன் நானும் ஒரு மதுரைக்காரனாக அவர்களை போல, அவர்கள் மொழியை கூச்சம் இல்லாமல் பேசுவது கஷ்டமாக இருந்தது. அதை பழகிக்கொள்ள கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது, அதன் பிறகு அதுவே பழகிவிட்டது” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.

நடிகர் தனுஷின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Dhanush (@dhanushkraja)

நடிகர் தனுஷ் தனது கைவசத்தில் பல படங்களை வைத்துள்ளார். 2026 நவம்பர் 20ம் தேதியில் இவரின் நடிப்பில் ஓ.எம் என்ற படமானது வெளியாகிறது. இதையடுத்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் டி 56 படமும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் டி57 திரைப்படமும் என தனது கைவசத்தில் அடுத்தடுத்த படங்களை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us