AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“கட்சி விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை!”.. தவெக நிர்வாகிகளுக்கு தலைமை விடுத்த எச்சரிக்கை.. பின்னணி என்ன?

TVK leadership warning party functionaries: கட்சி விதிகளை மீறினாலும், தவறான செயல்களில் ஈடுபட்டாலும் தவெக நிர்வாகிகளின் பதவி பறிக்கப்படுவதோடு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக வெற்றிக் கழகத் தலைமை எச்சரித்துள்ளது. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அனைத்து மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளுக்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

“கட்சி விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை!”.. தவெக நிர்வாகிகளுக்கு தலைமை விடுத்த எச்சரிக்கை.. பின்னணி என்ன?
முதல்வர் விஜய்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 18 Nov 2026 07:56 AM IST

சென்னை, நவ.18: தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் மாற்றம் தருவதாக களமிறங்கிய தமிழக வெற்றிக் கழகம், தனது கட்சிக் கட்டமைப்பைக் பலப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கட்சித் தலைவர் விஜய்யின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களின்படி தொண்டர்களும் நிர்வாகிகளும் செயல்பட வேண்டும் என தலைமை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், சமீப காலமாகச் சில கட்சி நிர்வாகிகள் மீது தொடர்ச்சியாகப் புகார்கள் எழுந்துள்ளதைக் கருத்தில் கொண்டு, தவெக தலைமை மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. கட்சியின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது எந்தவிதத் தயவுமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: “விரைவில் நமது ஆட்சி உதயமாகும்… திருச்சி கிழக்கில் இடைத்தேர்தல் வரப்போகிறது” – திமுக நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

பொதுச்செயலாளர் விடுத்த எச்சரிக்கை:

இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மூலமாக அனைத்து மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளுக்கும் இந்தச் புதிய மற்றும் கடுமையான எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. கட்சியில் பொறுப்பில் உள்ளவர்கள் எதையும் எதிர்பார்க்காமல் மக்கள் நலனுக்காகவும் கட்சி வளர்ச்சிக்கும் மட்டுமே உழைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தலைவர் விஜய் மீதான நற்பெயரைக் காக்கும் வகையில் தொண்டர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்றும், நீங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் உங்களுக்கான உரிய அங்கீகாரத்தை தலைமை வழங்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுயநலமின்றி செயல்பட வேண்டியதன் அவசியத்தை அவர் நிர்வாகிகளுக்குத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

புகார்களும் தலைமையின் நேரடிக் கண்காணிப்பும்:

சமீப காலமாக சமூக வலைதளங்களில் தவெக நிர்வாகிகள் சிலரின் நடவடிக்கைகள் குறித்தும், அவர்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் கட்சித் தலைமை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. மாவட்ட ரீதியாகவும் மாநில அளவிலும் வரக்கூடிய அனைத்துப் புகார்களும் தலைமைக்கு நேரடியாகக் கொண்டு செல்லப்படுவதால், தவறு செய்பவர்கள் எவராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. கட்சி விதிகளை மீறும் செயல், பொதுமக்களிடம் முறையற்ற நடந்து கொள்ளுதல் மற்றும் வரம்பு மீறிய செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடியாகத் துறைரீதியான மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: “தமிழக வெற்றிக் கழக ஆட்சி கலப்பட ஆட்சி.. சூரசம்ஹாரமே சாட்சி!” – முன்னாள் அமைச்சர் சேகர்பாபு கடும் விமர்சனம்!

கண்டிப்பான அறிவிப்பால் கட்சியினரிடையே பரபரப்பு:

கட்சி ஒழுக்கத்தைக் பேணிக்காக்கும் நோக்கில் தவெக தலைமை எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய அரசியல் கட்சியாக வளர்ந்து வரும் சூழலில், தொண்டர்களின் நன்னடத்தையும் ஒழுக்கமும்தான் கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்பதால் தலைமை இத்தகைய கடுமையான முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள தவெக நிர்வாகிகள் அனைவரும் தங்களது செயல்பாடுகளில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Follow Us