AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

குழந்தைகளுக்கு சளி, இருமல் இருந்தால் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் – அமைச்சர் அருண்ராஜ் பகிர்ந்த தகவல்

Tamil Nadu School Children Fever Alert : 108 அவசரகால மருத்துவ உதவி அழைப்பு மையத்தை முதல்வர் விஜய் நவம்பர் 17, 2026 நேற்று ஆய்வு செய்தார். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அருண்ராஜ், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச மருத்துவக் காப்பீடு வழங்குவதற்கா அரசாணை விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு சளி, இருமல் இருந்தால் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்  – அமைச்சர் அருண்ராஜ் பகிர்ந்த தகவல்
அமைச்சர் அருண்ராஜ்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 18 Nov 2026 07:39 AM IST

சென்னை, நவம்பர் 18 : 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச மருத்துவக் காப்பீடு வழங்குவதற்கா அரசாணை விரைவில் வெளியிடப்படும் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் டிஎம்எஸ் வளாகத்தில் அமைந்துள்ள 108 அவசரகால மருத்துவ உதவி அழைப்பு மையத்தை முதல்வர் விஜய் நவம்பர் 17, 2026 நேற்று ஆய்வு செய்தார். குறிப்பாக 108 ஆம்புலன்ஸ் வாகனங்களையும், அதில் உள்ள வசதிகளை் குறித்து முதல்வர் கேட்டறிந்தார்.

108 அவசரகால உதவி அழைப்பு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு

மேலும், அவசர மருத்துவ சேவைகளின் தரத்தை மேம்படுத்தி, உயிரிழப்புகளை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அலுவலர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. 108 ஆம்புலன்ஸ் சேவையை மேலும் மேம்படுத்தும் வகையில், கூடுதலாக நூறு ‘108’ ஆம்புலன்ஸ் கொள்முதல் செய்ய ஆணை வழங்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை உடனடியாக கொள்முதல் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டுவர அலுவலர்களுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டார்.

இதையும் படிக்க : தோனிக்கு பிரியாவிடை கொடுக்க ஒரு வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும்! – மு.க.ஸ்டாலின் உருக்கம்

இதையடுத்து, முதல்வர் தலைமையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ், செயலாளர் டாக்டர் தாரேஸ் அகமது,  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அருண்ராஜ், சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க போக்குவரத்து துறை, காவல்துறை, மருத்துவத்துறை இணைந்து செயல்பட வேண்டும் என முதல்வர் விஜய் அறிவுறுத்தியதகா தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், சாலை விபத்துகளில் பாதிக்கப்படுவருக்காக ‘முதலமைச்சர் அவசர உதவி திட்டம்’ கொண்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டும் தினமும் 50 பேர் வரை சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர். இதில் பெரும்பாலும் ஹெல்மெட் அணியாமல் இருப்பதால் உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே, ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்ற சட்டத்தை எந்த அளவுக்கு செயல்படுத்துகிறோம் என முதல்வர் கேட்டறிந்தார். மேலும், சென்னையை தவிர மற்ற நகரங்களிலும் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயுமாறு முதல்வர் அறிவுறுத்தினார்.

‘குழந்தைகளுக்கு சளி, இருமல் இருந்தால் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்’

காவல்துறை இதனை ஒருபுறம் செய்தாலும், பொதுமக்களே சுய விழிப்புணர்வுடன் ஹெல்மெட் அணிந்து செல்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அதேபோல், தமிழகத்தில் தற்போது மழை பெய்து வருவதால் தட்பவெட்ப நிலை மாறியுள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளது. குழந்தைகளுக்கு சளி, இருமல் இருந்தால் தயவுசெய்து பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள்.

இதையும் படிக்க : கடன் பிரச்னை, ஆடம்பர வாழ்க்கைக்காக தனிஷ்க் நகைக்கடையில் கொள்ளை! யூடியூபர் நிஷாந்த் குறித்து காவல் ஆணையர் பரபரப்பு தகவல்

தமிழ்நாட்டில் முதலமைச்சரின் இலவச மருத்துவக் காப்பீடு ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வயது உச்ச வரம்பு ஏதுமில்லாத இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படும். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்” என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

Follow Us