AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Tamil Nadu Weather forecast: தீவிர புயலாக வலுப்பெறும் அக்வான் – எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் தகவல்

Tamil Nadu Weather Alert: வங்கக்கடலில் நிலவும் அக்வான் புயல் மிகத் தீவிர புயலாக வலுப்பெற்று நவம்பர் 20ஆம் தேதி ஆந்திராவில் கரையைக் கடக்கக்கூடும். இதன் காரணமாக சென்னை, திருவள்ளூரில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Tamil Nadu Weather forecast: தீவிர புயலாக வலுப்பெறும் அக்வான் – எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?  வானிலை மையம் தகவல்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 18 Nov 2026 06:50 AM IST

சென்னை, நவம்பர் 18 : வங்கக்கடலில் நிலவி வரும் ‘அக்வான்’ புயல் நவம்பர், 18, 2026 இன்று காலை தீவிர புயலாக வலுப்பெறும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் நவம்பர் 19, 2026 நாளை மாலை மிகத் தீவிர புயலாக வலுப்பெற்று, நவ.20, 2026 ஆந்திர மாநிலம் (Andhra Pradesh) நெல்லூர் – விசாகப்பட்டினம் இடையே கரையை கடக்கக் கூடும் எனவும், அந்நேரத்தில் மணிக்கு 145 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணிக்கப்பட்டுள்ளது.

எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

இதனிடையே தமிழகத்தில் நவம்பர் 18, 2026 இன்று சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக்தத்தின் தெற்கு கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : திருமண நாளில் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம், பட்டுப்புடவை வழங்கும் அண்ணன் சீர் திட்டம்.. தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை வெளியீடு..

மேலும் நவம்பர் 19, 2026 நாளை சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை நிலவரம்

சென்னையைப் பொறுத்த வரை நவம்பர் 18, 2026 இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 முதல் 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

வடதமிழக கடற்கரை பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இதன் காரணமாக, வருகிற நவம்பர் 20, 2026 வரை வடகடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் துரை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிக்க : Cyclone Akvan: நவம்பர் 20-ம் தேதி கரையை கடக்கும் அக்வான் புயல்.. வட கடலோர மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. எத்தனை நாட்களுக்கு?

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை வரை சிவகங்கை பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ‘அக்வான்’ புயல் சின்னம் காரணமாக வங்கக்கடல் பகுதியில் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் பயணிகள், கப்பல் பணியாளர்கள் மற்றும் கப்பலின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாகை -இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ள கப்பல் நிர்வாகம், புயல் கரையை கடந்த பின்னரும், வானிலை சீரடைந்ததும் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என தெரிவித்துள்ளது.

Follow Us