Sai Pallavi: மாரி 2 படத்தின் ஷூட்டிங்கின்போது தனுஷ் என்ன அப்படி சொல்லிட்டாரு – சாய் பல்லவி பேச்சு!
Sai Pallavi on Maari 2: தென்னிந்திய மொழிகளில் நாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்துவருபவர் சாய் பல்லவி. முன்பு நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், தனுஷின் மாரி 2 படத்தின் ஷூட்டிங்கில் நடந்த கலகலப்பான விஷயம் குறித்து பகிர்ந்துள்ளார். அது பற்றி விவரமாக பார்க்கலாம்.
மலையாளம் சினிமாவின் மூலமாக நடிகையாக அறிமுகமாகி, தற்போது பாலிவுட் சினிமா வரையிலும் கலக்கிவருபவர் சாய் பல்லவி (Sai Pallavi). இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஏக் தின் (Ek Din). இதில் ஆமிர்கானின் மகன் ஜுனைத் கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். வித்தியாசமான காதல் கதையில் வெளியான இந்த படமானது இவருக்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை கொடுத்திருந்தது. இந்த படத்திற்கு பிறகும் சாய் பல்லவி இந்தியில் படங்களில் பணியாற்றிவருகிறார். மலையாளத்தில் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில், 2015ம் ஆண்டில் வெளியான பிரேமம் (Premam) என்ற படத்தில் மூலமாக நாயகியாக அறிமுகமானார்.
இந்த படம் இவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுக்க,தமிழில் இவருக்கு முதல் அறிமுக படமாக அமைந்ததுதான் மாரி 2. இதில் தனுஷுக்கு ஜோடியாக இணைந்து நடித்திருந்தார். முன்பு நேர்காணல் ஒன்றில் பேசிய சாய் பல்லவி, அதில் மாரி 2 (Maari 2) படத்தின் ஷூட்டிங்கில், தன்னை பற்றி தனுஷ் (Dhanush) சொன்ன விஷயம் பற்றி பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: ரஜினி முதல் விஜய் வரை.. தனக்கு பிடித்த தமிழ் திரைப்பட லிஸ்டை சொன்ன கயாடு லோஹர்!
நடிகர் தனுஷுடன் மாரி 2 திரைப்படத்தில் பணியாற்றி சம்பவம் குறித்து பேசிய சாய் பல்லவி:
அந்த நேர்காணலில் நடிகை சாய் பல்லவி, “மாரி 2 படத்தில் தனுஷுடன் பல்வேறு .தருணங்கள் பற்றி கூறியுள்ளார். அதில் பேசிய சாய் பல்லவி குறிப்பிட்ட சில விஷயத்தை தெரிவித்தார். “நான் மாரி 2- ஆனந்தி கதாபாத்திரம் ரொம்ப ஜாலியாக இருக்கும் என நினைத்த நடிக்க சம்மதித்தேன். ஆனால் அதில் பல எமோஷனலான காட்சிகளும் இருந்தது. அதில் ஒரு ரொம்ப எமோஷனலாகி நான் ஷாட் முடிந்தபிறகும் அழுதுகொண்டிருந்தேன்.
இதையும் படிங்க: கொழு கொழுவென கியூட்டாக இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா? பாலிவுட் டூ கோலிவுட்டை கலக்கும் நடிகை இவர்!
சார் என்னை பார்த்து, இனிமேல் இந்த பொண்ண என்னுடன் நடிக்க சொல்லாதீங்க என சொன்னாரு. அந்த காட்சியில் என்னுடன் நடிக்கும்போது தனுஷ் சாரும் அழுத்துட்டாரு. அப்படி சொன்னாரு” என அதில் நடிகை சாய் பல்லவி தெரிவித்திருந்தார்.
நடிகை சாய் பல்லவியின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
View this post on Instagram
நடிகை சாய் பல்லவி மாரி 2 படத்திற்கு பின், தற்போது மீண்டும் தனுஷின் நடிப்பில் உருவாகும் புது படத்தில் இணைந்துள்ளார் அது வேறுயெந்த படமும் இல்லை ஓம் தான். இந்த படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க, தனுஷ் தயாரிக்கிறார். இதற்கு பின் இவரின் நடிப்பில் ராமாயனா 2 படமும் உருவாக்கவுள்ளது. மேலும் விஜய் சேதுபதியுடன், மணிரத்தினம் இயக்கத்தில் புதிய படத்திலும் இணைந்து நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.