Actress Chandini Tamilarasan Profile: வெள்ளித்திரை டூ சின்னத்திரை… பிக்பாஸ் தமிழ் சீசன் 10 போட்டியாளராக களமிறங்கும் நடிகை சாந்தினி!
Bigg Boss Tamil Season 10 | வெள்ளித்திரையில் நாயகியாக அறிமுகம் ஆகி தொடர்ந்து நாயகியாக நடித்து வந்த நடிகை சாந்தினி தமிழரசன் தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி உள்ளார். அது குறித்து தற்போது பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் கடந்த 2010-ம் ஆண்டு மறைந்த இயக்குநர் கே.பாக்யராஜ் எழுதி இயக்கிய படம் சித்து பிளஸ் 2. இந்தப் படத்தில் நடிகர் சாந்தனு நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை சாந்தினி தமிழரசன் நாயகியாக நடித்து இருந்தார். மேலும் நடிகை சாந்தினி தமிழரசன் இந்தப் படத்தின் மூலமாகதான் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நாயகியாக அறிமுகம் ஆன முதல் படம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகை சாந்தினி தமிழ் சினிமாவில் அடுத்தடுத்துப் பலப் படங்களில் நடித்து உள்ளார். அதன்படி நடிகை சாந்தினி நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் நான் ராஜாவாகப் போகிறேன், வில் அம்பு, கட்டப்பாவை காணோம், பாம்பு சட்டை, வஞ்சகர் உலகம், பில்லா பாண்டி என பலர் இந்தப் படத்தில் நடித்து உள்ளனர்.
மேலும் நடிகை சாந்தினி தமிழரசன் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தெலுங்கு மொழியிலும் அவ்வபோது படங்களில் நடித்து உள்ளார். மேலும் இவர் சின்னத்திரை சீரியல்களிலும் நாயகியாக நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




பிக்பாஸ் தமிழ் சீசன் 10 போட்டியாளராக களமிறங்கும் நடிகை சாந்தினி:
தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் பலப் படங்களில் நாயகியாக நடிகை சாந்தினி நடித்து இருந்தாலும் ரசிகர்களிடையே பெரிய அளவில் இவர் வரவேற்பைப் பெறவில்லை என்றே கூறலாம். இப்படி இருக்கும் நிலையில் நடிகை சாந்தினி தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலமிறங்கி உள்ளார். அவரது வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் அப்டேட்!
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
பிக் பாஸ் இல்லத்தில் #Chandini | #NOWSHOWING | Bigg Boss Tamil Season 10 #GrandLaunch
Bigg Boss Tamil Season 10 #GrandLaunch – இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #Nowshowing #BiggBossTamilSeason10 #TuneInNow #Ottikichi #VijaySethupathi #CarniVizha #Bigg… pic.twitter.com/jbf5zlkgXA
— Vijay Television (@vijaytelevision) September 6, 2026