AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சினிமாவில் 18 வருடங்களைக் கடந்த நடிகர் நானி – வைரலாகும் எக்ஸ் தள பதிவு

18 Years Of Nani | தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் நானி. இவர் சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கி இன்றுடன் 18 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அவர் வெளியிட்ட சமூகவலைதளப் பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சினிமாவில் 18 வருடங்களைக் கடந்த நடிகர் நானி – வைரலாகும் எக்ஸ் தள பதிவு
நானிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Sep 2026 15:50 PM IST

தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் நானி. இவரது நடிப்பில் தெலுங்கு சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இவர் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் படங்களில் நடித்து வந்தாலும் அவ்வபோது தமிழ் மற்றும் இந்தி மொழிகளிலும் நடித்து வருகிறார். தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் நானி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் தி பாரடைஸ். இந்தப் படத்தினை இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா எழுதி இயக்கி உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள நிலையில் தொடர்ந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகி உள்ளது.

நடிகர் நானியின் நடிப்பில் உருவாகி வரும் தி பாரடைஸ் படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் சமீபத்தில் எக்ஸ் தள பக்கத்தில் தனது சினிமா பயணம் தொடங்கி 18 ஆண்டுகள் நிறைவடைந்தது குறித்து பதிவு ஒன்றை வீடியோ உடன் வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சினிமாவில் 18 வருடங்களைக் கடந்த நடிகர் நானி:

அந்தப் பதிவில் நடிகர் நானி கூறியுள்ளதாவது, 18 ஆண்டுகள். திரைத்துறையில் அதிகாரப்பூர்வமாக ஒரு முதிர்ந்த கலைஞன். உங்கள் அன்பை நான் ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக்கொண்டதில்லை. இனியும் எடுத்துக்கொள்ள மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். அதன்படி நடிகர் நானி கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 05-ம் தேதி வெளியான அஷ்டா சம்மா என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே இன்று அவர் தனது 18 ஆண்டுகளைக் கொண்டாடி வருகிறார். மேலும் நடிகராக மட்டும் இன்றி சினிமாவில் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார் நடிகர் நானி.

Also Read… விறுவிறுப்பாக தொடங்கியது கமல் ஹாசனின் புதுப் பட பணிகள் – வைரலாகும் போட்டோஸ்

நடிகர் நானி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… சூர்யா சாருடன் நடிக்கும் போது தயக்கமும் பதற்றமும் இருந்தது – நடிகை கயாடு லோஹர்

Follow Us