AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்

Vishwanath And Sons Movie OTT Update | நடிகர் சூர்யாவின் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்தப் படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பது குறித்து தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 02 Sep 2026 14:32 PM IST
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இறுதியாக நடிகர் சூர்யாவின் நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியான படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்.

1 / 5
இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தினை இயக்குநர் வெங்கி அட்லூரி எழுதி இயக்கி இருந்தார். தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் இவரது இயக்கத்தில் இதுவரை வெளியான படங்கள் மாபெரும் வரவேற்பைப் பெற்றதைப் போல இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

2 / 5
இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்து உள்ளார். இவர்களின் ஜோடி திரையில் சூப்பராக இருந்தது என்று படத்தைப் பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அனைவரது நடிப்பும் ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

3 / 5
இந்தப் படம் கடந்த 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி சுமார் 15 நாட்களிலேயே ரூபாய் 240 கோடிகள் வரை வசூலித்தது. இதுகுறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிட்டு இருந்தது. மேலும் தற்போதும் படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

4 / 5
இந்த நிலையில் இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பது குறித்து தகவல் சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி படம் செப்டம்பர் மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. இது குறித்து படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

5 / 5
Follow Us