AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு – வைரலாகும் பதிவு

Jailer 2 Movie Release Update | நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வைரலான நிலையில் படக்குழு அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு – வைரலாகும் பதிவு
ஜெயிலர் 2Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Sep 2026 12:37 PM IST

உலக அளவில் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வருகின்றது. தொடர்ந்து 50 ஆண்டுகளாக தனது சினிமா வாழ்க்கையில் அதிகப்படியாக ஹிட் படங்களை கொடுத்து உச்ச நடிகராக வலம் வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு தற்போது 75 வயதைக் கடந்துள்ள நிலையில் தொடர்ந்து சினிமாவில் இருந்து விலமாகல் பிசியாக நடித்து வருகிறார். மேலும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வருடத்திற்கு ஒரு படமாவது தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் கடந்த 2025-ம் ஆண்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் இந்த 2026-ம் ஆண்டில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2. இயக்குநர் நெல்சன் திலீப் குமார் எழுதி இயக்கி உள்ள இந்தப் படம் முதல் பாகத்தைப் போல மாபெரும் வரவேற்பைப் பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.

ஜெயிலர் 2 பட ரிலீஸ் தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி:

ரஜினிகாந்த் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் வெளியாக உள்ள ஜெயிலர் 2 படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக தொடர்ந்து செய்திகள் சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வந்தது. ஆனால் அதுகுறித்து படக்குழு எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளையும் இதுவரை வெளியிடாமல் இருந்தது. ஆனால் தற்போது படக்குழு தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வருகின்ற 15-ம் தேதி அக்டேபர் மாதம் 2026-ம் ஆண்டு ஜெயிலர் 2 படம் நிச்சயமாக வெளியாகும் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் இதுவரை சினிமா வட்டாரங்களில் வெளியான வதந்திகளுக்கும் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்திலிருந்து வெளியானது தி வெட்டிங் பாடல்!

ஜெயிலர் 2 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ட்விட்டரில் வரும் நெகட்டிவ் விமர்சனங்கள் குறித்து ஓபனாக பேசிய ஜிவி பிரகாஷ்

Follow Us