Thagappan: ஜீவாவின் தகப்பன் படத்தின் ஷூட்டிங் ஓவர் – கொடுத்ததுடன் வெளியான வீடியோ!
Jiiva Thagappan Movie Shooting Wrap: தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருந்துவருபவர் ஜீவா. இவரின் நடிப்பிலும் இயக்குநர் ரா.வெங்கட் இயக்கத்தில், உருவாகிவரும் படம்தான் தகப்பன். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கிய நிலையில், சில நாட்களுக்குள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து படங்களில் நடித்து, மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜீவா (jiiva). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இவரின் நடிப்பில் இறுதியாக தமிழில் வெளியான திரைப்படம் தலைவர் தம்பி தலையில் (TTT Movie). இந்த படமானது கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் உலகமெங்கும் வெளியானது. மலையாள இயக்குநரின் இயக்கத்தில் இவர் நடித்திருந்த இப்படமானது திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின், ஜீவா தொடர்ந்து புது படங்களில் ஒப்பந்தமாகியிருந்தது. அதில் அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் (Ra.Venkat) இயக்கத்தில், நடித்துவந்த புது படம்தான் தகப்பன் (Thagappan). இப்படத்தின் ஷூட்டிங் கடந்த ஜூலை மாதத்தின் இறுதியில் தொடங்கிய நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது.
இந்த படத்தில் ஜீவா ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ராஜீஷா விஜயன் நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், அது குறித்து நடிகர் ஜீவா வெளியிட்டுள்ளார்.




இதையும் படிங்க: வெறும் 10 நாட்களில்.. நிவின் பாலி – மமிதாவின் பெத்லகேம் குடும்ப யூனிட் பட மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
தகப்பன் படத்தின் ஷூட்டிங் நிறைவு குறித்து நடிகர் ஜீவா வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Every frame holds a feeling. Every moment carries a memory❤️#Thagappan Shooting Wrapped!
In Cinemas December 2026.@larkstudios1 @rajisha_vijayan @LakshmyRamki @ravenkatdir83 @dopmsukumar @kumarkarupannan @thinkmusicindia @proyuvraaj pic.twitter.com/VAFVHKSDGS
— Jiiva (@JiivaOfficial) August 30, 2026
நடிகர் ஜீவா இந்த தகப்பன் படத்தில் எமோஷ்னலான வேடத்தில் நடித்துள்ளாராம். அவருக்கு ஜோடியாக நடிகை ரஜீஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் பல முக்கியமான நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது சிறப்பான எமோஷனல் படமாக உருவாகியுள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கிய கிட்டத்தட்ட 40 நாட்களில் நிறைவடைந்துள்ளது. தற்போது இது தொடர்பான வீடியோ நடிகர் ஜீவா வெளியிட்டுள்ளார்.
ஜீவாவின் நடித்த தகப்பன் படத்தின் ரிலீஸ் எப்போது இருக்கும்:
ஜீவாவின் இந்த படமானது மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளதாம். இந்த படத்திற்கு பின்னும் ஜீவா பல திரைப்படங்களில் நடிகராக ஒப்பந்தமாகியுள்ளார். அதிலும் ரா.வெங்கட் இயக்கத்தில் தற்போது நடித்திருக்கும் திரைப்படம்தான் தகப்பன்.
இதையும் படிங்க: பிக் பாஸ் சீன் 10 கலந்துகொள்ளும் பெண் போட்டியாளர்கள் இவர்களா? லிஸ்ட் இதோ!
இந்த படமானது சிறப்பான மற்றும் எமோஷனலான கதையில் உருவாகியுள்ள நிலையில், எப்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த விதத்தில் இப்படமானது 2026ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என ஜீவா வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.