AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Jiiva: ஜியோ ஜியாலே… ஜீவாவின் ஜாலியா இருந்த ஒருத்தன் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

Jio Jiyale Song: சிவா மனசுல சக்தி பட இயக்குநர் ராஜேஷின் இயக்கத்தில், நடிகர் ஜீவா மீண்டும் இணைந்துள்ள புது படம்தான் ஜாலியா இருந்த ஒருத்தன். இப்படமானது செப்டம்பரில் வெளியாகும் நிலையில், இன்று (28/08/2026) இப்படத்தின் முதல் பாடலான ஜியோ ஜியாலே என்ற பாடல் வெளியாகியுள்ளது.

Jiiva: ஜியோ ஜியாலே… ஜீவாவின் ஜாலியா இருந்த ஒருத்தன் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!
ஜியோ ஜியாலே பாடல் வீடியோ
Barath Murugan
Barath Murugan | Updated On: 28 Aug 2026 18:20 PM IST

தமிழ் சினிமாவில் 2000ம் ஆரம்ப காலகட்டத்தில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவந்தவர்தான் ஜீவா (Jiiva). இவரின் நடிப்பில் இதுவரை பல படங்கள் வெளியாகியுள்ளது.இவர் முதலமைச்சர் விஜய்யுடன் நண்பன் திரைப்படத்தில் நடித்து மிகவும் வரவேற்பை பெற்றிருந்தார். சினிமாவில் தற்போதும் லீட் நாயகனாக படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் தலைவர் தம்பி தலைமையில் (TTT Movie). 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியான இப்படம் ஜீவாவுக்கு மாபெரும் வரவேற்பை பெற்றுக்கொடுத்தது. இந்த படத்திற்கு பின், ஜீவா கிட்டத்தட்ட 2 படங்களுக்கும் மேல் ஒப்பந்தமாகியுள்ளார். அதில் ஒரு படம்தான் ஜாலியா இருந்த ஒருத்தன் (Jolliya Iruntha Oruthan).

சிவா மனசுல சக்தி என்ற படத்தை இயக்கி பிரபலமான இயக்குநர் ராஜேஷ் எம் இப்படத்தை இயக்கியுள்ளார். கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு பின் இந்த கூட்டணி இணைந்துள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில் இப்படம் விரைவில் வெளியாக தயாராகிவரும் நிலையில், முதல் பாடலான ஜியோ ஜியாலே தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: சிக்மா பட கதையை முதலில் அவரிடம் சொன்னேன் – ஜேசன் சஞ்சய்!

ஜாலியா இருந்த ஒருத்தன் படத்தின் முதல் பாடலான ஜியோ ஜியாலே குறித்து நடிகர் ஜீவா வெளியிட்ட எக்ஸ் பதிவு:

ஜீவாவின் ஜாலியா இருந்த ஒருத்தன் திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே சிவா மனசு சக்தி படத்திற்கும் இவரே இசையமைத்திருந்த நிலையில், தற்போது 16 ஆண்டுகளுக்கு பின் மீண்டும், இணைந்த கூட்டணி படத்திற்கும் யுவன் சங்கர் ராஜாவே இசையமைத்துள்ளார்.

இதையும் படிங்க: மீண்டும் இணையும் நானி – கீர்த்தி சுரேஷ் காம்போ.. தி பாரடைஸ் பட சிறப்புப் பாடலில் நடனமாடுவதை உறுதி செய்த கீர்த்தி சுரேஷ்!

இப்படத்தை மலேசிய விநியோகஸ்தர் நிறுவனமான மாலிக் ஸ்ட்ரீம்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம்தான் ஜன நாயகன் படத்தின் மலேசிய ரிலீஸ் உரிமையை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீவாவின் ஜாலியா இருந்த ஒருத்தன் பட ரிலீஸ் எப்போது:

இந்த படத்தில் ஜீவா ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை இவனா நடித்துள்ளார். இவர் லவ் டுடே படத்தின் மூலம் பேமஸானவர். மேலும் பரிதாபங்கள் சுதாகர், ரித்திகா, பகவதி பெருமாள் போன்ற நடிகர்களும் இணைந்து நடித்துள்ளார்கள். இப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ஏஜிஎஸ் நிறுவனம் பெற்றுள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் இறுதியில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us