பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் நுழையும் கிரிக்கெட் வீரர்.. அட இவரா?
Cricketer to join Bigg Boss Tamil Season 10: தமிழ் சின்னத்திரையில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருப்பது பிக் பாஸ். 2026ம் ஆண்டிற்கான பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பமாகும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் கலந்துகொள்வதாக கூறப்படுகிறது. அந்த கிரிக்கெட்டர் யார் என பார்க்கலாம்.
மக்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகரித்து, பெரும் ஈர்ப்பை ஏற்படுத்திவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக் பாஸ் (Bigg Boss). கடந்த 2006ம் ஆண்டில் இந்தி மொழியில் முதல் முறையாக இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியானது, அமெரிக்காவில் நடத்தப்பட்ட பிக் பிரதர் (Big Bother) என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியின் தழுவலாக, இந்தியாவில் பிக் பாஸ் என நடத்தப்பட்டுவருகிறது. இந்த நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று. தமிழில் கடந்த 2017ம் ஆண்டு முதல் பிக் பாஸ் நிகழ்ச்சியானது ஆரம்பமான நிலையில், கிட்டத்தட்ட 9 சீசன்களை கடந்தது. இறுதியாக பிக் பாஸ் சீசன் 9 ஒளிபரப்பான நிலையில், மிகவும் கலவையான விமர்சனங்களையே மக்களிடையே பெற்றிருந்தது. அந்த விதத்தில், 2026ல் ஒளிபரப்பாகவுள்ள பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சி புதுவிதமாக நடைபெறவுள்ளதாம்.
இந்த நிகழ்ச்சியின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சீரியல் நடிகர்கள், சாதாரண மனிதர்கள் மற்றும் திரை பிரபலங்களும் போட்டியாளர்களாக கலந்துகொள்கிறார்களாம். இந்த வரிசையில் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக தகவல் வைரல்.




இதையும் படிங்க: டாக்ஸிக் பட இயக்குநருடன் நயன்தாரா நடித்திருக்கிறாரா? அட இந்த படமா?
பிக் பாஸ் சீசன் 10 தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கிரிக்கெட் வீரர்:
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது இந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி மாலை 6 மணிமுதல் தொடங்கவுள்ளது. இந்த ஷோ மீது பெரும் எதிர்பார்ப்புகள் இருக்கும் நிலையில், சீரியல் நடிகர்கள் பலரும் போட்டியாளர்களாக களமிறங்குவதாக கூறப்படுகிறது. இந்த வரிசையில் கிரிக்கெட் வீரர் முரளி விஜய் போட்டியாளராக பங்கேற்கவுள்ளதாக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகிவருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.
இதையும் படிங்க: ரம்யா கிருஷ்ணனுக்கு பதிலாக நானே.. அலா பொலேலோ பாடலில் ரஜினியுடன் பணியாற்றியது தருணம் – பூர்ணா பகிர்ந்த விஷயம்!
கிரிக்கெட் வீரர் முரளி விஜய்யின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
View this post on Instagram
கிரிக்கெட் வீரர் முரளி விஜய் ஏற்கனவே படங்களில் சில சில வேடங்களில் நடித்துவருகிறார். தற்போது கிரிக்கெட்டிலிருந்து கடந்த 2023ம் ஆண்டில் ஓய்வுபெற்றிருந்தார். அந்த விதத்தில், தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளராக நுழைவதாக வட்டாரங்களில் தகவல்கள் வைரலாகிவருகிறது. இது மேலும், ரசிகர்கள் மத்தயில் இந்நிகழ்ச்சியின் மீதான ஆர்வத்தை அதிகரித்திருக்கிறது. அது உண்மையா என பொறுத்திருந்து பார்க்கலாம்.