நோ அக்டோபர்… இந்த வருசம் செப்டம்பரே… பிக்பாஸ் தமிழ் சீசன் 10 குறித்து வெளியானது அதிகாரப்பூர்வ அப்டேட்
Bigg Boss Tamil Season 10 | தமிழ் நாட்டில் சின்னத்திரையில் அதிக வரவேற்பைப் பெறும் ஒரு நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 10-வது சீசன் எப்போது தொடங்க உள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நிகழ்ச்சி குழு தற்போது வெளியிட்டுள்ளது.
தமிழ் நாட்டில் வெள்ளித்திரையில் வெளியாகும் படங்களின் மீது மக்கள் ஆர்வம் காட்டுவதைவிட சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மீது மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி டிவி நிகழ்ச்சிகளை எல்லாம் வீட்டில் இருப்பவர்கள் தான் பார்க்கிறார்கள் என்ற ஸ்டீரியோ டைப் மாறி தற்போது சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும் ஓடிடியில் வெளியாவதால் அனைத்து தரப்பினரும் தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளை பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தமிழக மக்களால் அதிக வரவேற்பையும் கவனத்தையும் பெற்ற சின்னத்திரை நிகழ்ச்சியாக உள்ளது இந்த பிக்பாஸ் தமிழ். பான் இந்திய மொழிகளில் தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் இந்த பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இதுவரை 9 சீசன்கள் நிறைவடைந்து தற்போது 10-வது சீசனை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் ஒரு புது மாற்றத்துடனே தொடங்கி நடைப்பெற்று வருகின்றது. அந்த வகையில் இந்த 10-வது சீசன் தொடங்குவதற்கு முன்னதாகவே பிக்பாஸில் சாதாரண மக்களும் கலந்துகொள்ள ஒரு வாய்ப்பு என்று பிக்பாஸ் காமனர் என்ற நிகழ்ச்சியை நடத்தியது நிகழ்ச்சி குழு. இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான போது பல சர்ச்சைகளை சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது.




பிக்பாஸ் தமிழ் சீசன் 10 குறித்து வெளியானது அதிகாரப்பூர்வ அப்டேட்:
இப்படி இருக்கும் நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் தொடக்கம் எப்போது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ள வீடியோவில் அக்டோபர் வரை இந்த ஆண்டு காத்திருக்க வேண்டாம். செப்டரிலே பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி தொடங்க உள்ளது. அதன்படி பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் பிரமாண்ட தொடக்க விழா வருகின்ற 06-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… டாக்ஸிக் வெளியீடு.. உலகளவில் 12,000 தியேட்டர்களில் ரிலீஸ்.. மாஸ் ஓப்பனிங்!
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
செப்டம்பர் 6 எல்லாரும் ready-ah இருங்க..🤩😎 | Bigg Boss Tamil Season 10 😎🔥| 6th Sep 2026
நீங்களும் விட மாட்டீங்க.. உங்களையும் விடாது.. 😎😍 Bigg Boss Tamil Season 10 GRAND LAUNCH – செப்டம்பர் 6 மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #CarniVizha… pic.twitter.com/f46UEBySgE
— Vijay Television (@vijaytelevision) August 26, 2026
Also Read… கேங்ஸ்டராக மக்களின் மனதில் இடம் பிடித்தாரா யாஷ்? டாக்ஸிக் படத்தின் எக்ஸ் விமர்சனம் இதோ