AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பூஜையுடன் தொடங்கிய ஜி.வி.பிரகாஷ் குமாரின் நிஞ்சா பட ஷூட்டிங் – வைரலாகும் வீடியோ!

GV Prakash Ninja Film Pooja: தென்னிந்திய சினிமாவில் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்துவருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவரின் நடிப்பில் தமிழில் உருவாகிவரும் புதிய திரைப்படம்தான் நிஞ்சா. இந்த படத்தின் அறிவிப்புகள் சமீபத்தில் வெளியான நிலையில், இன்று (24/08/2026) இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் தொடங்கியுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

பூஜையுடன் தொடங்கிய ஜி.வி.பிரகாஷ் குமாரின் நிஞ்சா பட ஷூட்டிங் – வைரலாகும் வீடியோ!
நிஞ்ஜா திரைப்பட படப்பிடிப்பு பூஜைImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 24 Aug 2026 17:50 PM IST

தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்துவருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார் (GV Prakash Kumar). இவரின் இசையமைப்பில், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த விதத்தில், இவர் சினிமாவில் ஹீரோவாகவும் பணியாற்றிவருகிறார். இவரின் நடிப்பில் இதுவரைக்கும் கிட்டத்தட்ட 25க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. அதில் இறுதியாக வெளியான திரைப்படம் ஹேப்பி ராஜ் (Happy Raj). கடந்த 2026ம் ஆண்டு மார்ச் மாதத்தின் இறுதியில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பின், புது புது திரைப்படங்களில் இவர் நடித்துவருகிறார். அதில் தற்போது நிஞ்சா (Ninja) என்ற புதிய திரைப்படத்தில் நாயகனாக இணைந்துள்ளார்.

இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் முருகு என்பவர் இதை இயக்கவுள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு பதிவு சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் தொடங்கியுள்ளது. அந்த விதத்தில் இப்படத்தின் ஷூட்டிங் பூஜையின் வீடியோ மற்றும் புகைப்படங்களை படக்குழு பகிர்ந்துள்ளது.

இதையும் படிங்க: உன்னோடு வாழ்வது ஆனந்தமே ஒவ்வொரு பொழுதிலும் பேரின்பமே… 9 ஆண்டுகளைக் கடந்தது அஜித் குமாரின் விவேகம் படம்!

ஜி.வி. பிரகாஷ் குமாரின் நிஞ்சா திரைப்படத்தின் ஷூட்டிங் பூஜை தொடர்பான எக்ஸ் பதிவு:

ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக இணையும் TTT பட நடிகை:

இந்த நிஞ்சா படத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ப்ரதானா நாதன் இணைந்து நடிக்கிறார். இவர் லவ் டுடே, பார்க்கிங் மற்றும் ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் போன்ற திரைப்படங்களில் முக்கியமான வேடத்தில் இணைந்து நடித்திருக்கிறார். இவரே லீட் நாயகியாக நடிக்கவுள்ள புதிய திரைப்படம்தான் நிஞ்சா. இதில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக இணைகிறார்.

இதையும் படிங்க: தர்மன் பட ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத் சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – வைரலாகும் வீடியோ

ஜி.வி. பிரகாஷ் குமாரின் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷேன் ரோல்டன் இசையமைக்க, குறைந்த பட்ஜெட்டில் உருவாகிறதாம். இந்த படமானது காதல் மற்றும் காமெடி போன்ற கதைக்களத்தில் உருவாக்கப்படவுள்ளதாம். இந்த படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் தொடங்கிய நிலையில், 2027ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் பூஜை புகைப்படனங்கள் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Follow Us