AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

PS Mithran: ஹீரோ படம் பிளாப் ஆனபோது வருத்தம் இருந்தது.. ஆனால் – இயக்குநர் பி.எஸ்.மித்ரன் பேச்சு!

PS Mithran Reflects on Hero Failure: கோலிவுட் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர்தான் பி.எஸ்.மித்ரன். இவரின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் சர்தார் 2. இவர் சிவகார்த்திகேயன் ஹீரோ படத்தையும் இயக்கியிருந்த நிலையில், அந்த படம் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் அந்த படத்தின் தோல்வி குறித்து முதல் முறையாக பி.எஸ்.மித்ரன் விளக்கம் கொடுத்துள்ளார்.

PS Mithran: ஹீரோ படம் பிளாப் ஆனபோது வருத்தம் இருந்தது.. ஆனால் – இயக்குநர் பி.எஸ்.மித்ரன் பேச்சு!
ஹீரோ திரைப்படம் பற்றி பி.எஸ். மித்ரன்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 23 Aug 2026 21:29 PM IST

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் பி.எஸ்.மித்ரன் (PS Mithran). இவரின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) முதல் கார்த்தி (Karthi) வரை பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள். இவரின் இயக்கத்தில் சினிமாவில் இறுதியாக வெளியான திரைப்படம் சர்தார் (Sardar). 2022ம் ஆண்டில் கார்த்தியின் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் இவருக்கு மாபெரும் வரவேற்பை கொடுத்திருந்தது. இந்த படத்திற்கு பின் சர்தார் 2 படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகளில் இருந்தார். தற்போது கார்த்தியின் நடிப்பில் சர்தார் 2 (Sardar 2) படமும் உருவாகியுள்ளது. இதில் மாளவிகா மோகனன் (Malavika Mohanan), ஆஷிகா ரங்கநாத், எஸ்.ஜே.சூர்யா (SJ Suryah) மற்றும் ரஜீஷா விஜயன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் 2026ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது.

இந்த படத்தின் விளம்பரப் பணிகளும் சிறப்பாக நடைபெற தொடங்கியுள்ளது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய பி.எஸ்.மித்ரன், சிவகார்த்திகேயனின் ஹீரோ (Hero) படத்தின் தோல்வி குறித்து பேசியுள்ளார். மேலும் சர்தார் 2 படத்தின் மீதுள்ள நம்பிக்கை பற்றியும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தெலுங்கு ரசிகர்களைப் போல் வேறு ரசிகர்கள் இல்லை – நெகிழ்ச்சியாக பேசிய கியாரா அத்வானி!

சிவகார்த்திகேயனின் ஹீரோ திரைப்படத்தின் தோல்வி குறித்து பேசிய இயக்குநர் பி.எஸ்.மித்ரன்:

அந்த பேட்டியில் பேசிய இயக்குநர் பி.எஸ்.மித்ரன், “ஹீரோ திரைப்படம் பிளாப் ஆனபோது எனக்கு வருத்தம் இருந்தது, ஆனால் உடைந்துபோகவில்லை. ஆனால் ரொம்ப நம்பினோம், படம் ஓடிவிடும் என்று, அந்த நேரத்தில் ஒரு மெத்தனம் இருக்குமல்லமா? அதுபோல எனக்கு இருந்தது. அப்போது எது கொடுத்தாலும் பார்த்துவிடுவார்கள் என நினைத்தேன், அதுதான் அடி செருப்பால என, என்னை திருத்திய ஒரு படம். நமது பார்வையை நினைவாக்கும் வகையில், தயாரிப்பாளருக்கு அந்த படத்திற்கான வசூலையும் பெற்றுக்கொடுக்கவேண்டும்.

இதையும் படிங்க: எப்போதும் எனது சொக்கத் தங்கம் அவர்கள்தான் – சிவகார்த்திகேயன் பேச்சு!

நான் பட்ஜெட் படம் கிடைக்கவேண்டும் என்றால், அதற்கு முந்தைய படத்திற்கு அந்த பட்ஜெட் அளவுக்கு நான் வசூல் கொடுத்திருக்கவேண்டும். இரும்புத்திரை படத்தின் வெற்றிக்கு பின் அத்தனை நடிகர்கள் மற்றும் அத்தனை தயாரிப்பாளார்கள் இருந்தார்க், ஆனால் ஹீரோ படத்திற்கு பின் எனக்காக படத்தில் நடிக்க கார்த்தி சார் மட்டுமே இருந்தார்” என அந்த நேர்காணலில் பேசியிருந்தார்.

சர்தார் 2 படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

சர்தார் 2 படத்தில் கார்த்தியுடன் பல்வேறு நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைத்துள்ள நிலையில், பாடல்களும் சிறப்பாக உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், விரைவில் இப்படத்தின் பாடல்கள் மேட்டரும் ட்ரெய்லர் குறித்த அப்டேட்டுகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us