AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Sivakarthikeyan: எப்போதும் எனது சொக்கத் தங்கம் அவர்கள்தான் – சிவகார்த்திகேயன் பேச்சு!

Sivakarthikeyan About His fans: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் நகைக்கடை திறப்பு விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அவர், தனது வாழ்க்கையில் யார் சொக்கத் தங்கம் என தெரிவித்துள்ளார். அது பற்றி விவரமாக பார்க்கலாம்.

Sivakarthikeyan: எப்போதும் எனது சொக்கத் தங்கம் அவர்கள்தான் – சிவகார்த்திகேயன் பேச்சு!
சிவகார்த்திகேயன் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 23 Aug 2026 16:38 PM IST

தமிழ் சினிமாவில் சின்னத்திரை தொகுப்பாளராக இருந்து, தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). விஜய் தொலைக்காட்சியின் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கிய அவர், தற்போது சினிமாவில் லீட் நாயகனாக நடித்துவருகிறார். சினிமாவில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம் பராசக்தி (Parasakthi). இயக்குநர் சுதா கொங்கராவின் (Sudha Kongara) இயக்கத்தில் வெளியான இந்த படம் இவருக்கு மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை கொடுத்தது. இதன் பிறகு சிவகார்த்திகேயனின் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் சேயோன் (Seyon). இதை இயக்குநர் சிவகுமார் முருகேசன் (Sivakumar Murugesan) இயக்க, கமல்ஹாசன் (Kamal Haasan) தயாரிக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. சமீபத்தில் தனியார் நகைக்கடை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார். அந்த நகைக்கடை நிகழ்ச்சியின்போது பேசிய சிவகார்த்திகேயன் தனது சொக்கத்தங்கம் யார் என்பது பற்றி பேசியுள்ளார்.

இதையும் படிங்க: தெலுங்கு ரசிகர்களைப் போல் வேறு ரசிகர்கள் இல்லை – நெகிழ்ச்சியாக பேசிய கியாரா அத்வானி!

நகைக்கடை திறப்பு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசிய விஷயம்:

அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தொகுப்பாளினி சிவாங்கி, “உங்களின் வாழ்க்கையில் சுத்தமான சொக்கத் தங்கம் யார்? என கேட்டார். அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், “எனது ரசிகர்கள்தான்.., ஏனென்றால் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது, அவர்களால் என் மரியாதை கூடிக் கொண்டே இருக்கிறது” என அதில் அவர் வெளிப்படையாக கூறினார்.

தனது ரசிகர்கள் குறித்து சிவகார்த்திகேயன் பேசியது தொடர்பான வீடியோ பதிவு:

நடிகர் சிவகார்த்திகேயன் சேயோன் திரைப்படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார். சிவகுமார் முருகேசனின் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தின் ஷூட்டிங் மதுரையில் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், பாக்யஸ்ரீ போர்ஸ், ராஜ் பி செட்டி மற்றும் பாலா சரவணன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இணைந்து பணியாற்றிவருகிறார்கள்.

இதையும் படிங்க: கார் ரேஸில் விபத்து… நடிகர் அஜித் குமாருக்கு என்ன ஆச்சு? வைரலாகும் வீடியோ

இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 2026ம் செப்டம்பர் இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விரைவில் இதன் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படமானது 2026ம் ஆண்டு தீபாவளி அல்லது 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என கூறப்படுகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் நிலையில், முதல் பாடல் ரிலீஸ் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என அவரே தெரிவித்துள்ளார்.

Follow Us