AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Seyon: ஆடி வெள்ளி பூத்திருச்சு… சிவகார்த்திகேயனின் சேயோன் பட 2வது ஷெட்யூல் இன்று தொடங்கிருச்சு!

Seyon Second schedule shooting: சிவகார்த்திகேயனின் நடிப்பிலும், கமல்ஹாசனின் தயாரிப்பிலும் அமரன் படத்திற்கு பின் உருவாகிவரும் படம் சேயோன். இந்த படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன்னே தொடங்கிய நிலையில், இன்று (11/08/2026) இப்படத்தின் 2வது ஷெட்யூல் ஷட்டிங் தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான வீடியோவை வெளியிட்ட நிலையில், இணையத்தில் வைரலாகிவருகிறது.

Seyon: ஆடி வெள்ளி பூத்திருச்சு… சிவகார்த்திகேயனின் சேயோன் பட 2வது ஷெட்யூல் இன்று தொடங்கிருச்சு!
சேயோன் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 11 Aug 2026 13:10 PM IST

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நாயகனாக இருந்துவருபவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவரின் நடிப்பில் கோலிவுட் சினிமாவில் தொடர்ந்து மிக பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான ஆக்ஷன் திரைப்படம்தான் பராசக்தி (Parasakthi). இந்த படம் உண்மையான சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் இப்படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த படத்திற்கு பின் தாய் கிழவி (Thaai Kizhavi) பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் (Sivakumar Murugesan) இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் புதிய திரைப்படம்தான் சேயோன் (Seyon). இதில் சிவகார்த்திகேயன் அதிரடி கிராமத்து நாயகனாக நடித்துவருகிறாராம். இப்படத்தின் முதல் ஷெட்யூல் சில வாரங்களுக்கு முன் நிறைவடைந்த நிலையில், தனது குடும்பத்துடன் சிவகார்த்திகேயன் சுற்றுலா சென்றிருந்தார். இதை முன்னிட்டு அவர் நேற்று (10/08/2026) மதுரைக்கு சேயோன் பட ஷூட்டிங்கிற்காக சென்றிருந்தார்.

அந்த வகையில் இன்று, 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதியில், சேயோன் திரைப்படத்தின் 2வது ஷெட்யூல் ஷூட்டிங் தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ள நிலையில், இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது.

இதையும் படிங்க: அனைவரின் இதயத்திலும் ஒரு சிறப்பான இடத்தைப் பிடிக்கும்.. விஸ்வநாத் & சன்ஸ் குறித்து சூர்யா பேச்சு!

சேயோன் திரைப்படத்தின் 2வது ஷெட்யூல் ஷூட்டிங் தொடங்கியது குறித்து படக்குழு வெளியிட்ட வீடியோ பதிவு:

சேயோன் பட ரிலீஸ் ஆயுத பூஜைக்கா? அல்லது 2027 பொங்கலா?:

நடிகர் சிவகார்த்திகேயனின் சேயோ திரைப்படமானது விருமாண்டி சாமி மற்றும் முருகனின் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுவருகிறதாம். வருத்தப்படாத வாலிபர் சங்கத்திற்கு பின் பக்க கிராமத்து கதைக்களம் கொண்ட திரைப்படமாக சேயோன் திரைப்படம் உருவாக்கப்பட்டுவருகிறதாம். இதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துவருகிறார். மேலும் பிரபல கன்னட நடிகர் ராஜ் பி ஷெட்டி இப்படத்தில் மெய்யின் வில்லனாக நடித்துவருகிறாராம். அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் இப்படம் உருவாக்கப்பட்டுவரும் நிலையில், படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

இதையும் படிங்க:  பேக் இன் ஆக்ஷன்.. சிறப்பாக தொடங்கியது சிலம்பரசனின் அரசன் பட அடுத்த செட்யூல் ஷூட்டிங்!

தற்போதுதான் சேயோன் படத்தின் ஷெட்யூல் ஷூட்டிங் தொடங்கியுள்ள நிலையில், இன்னும் 50 சதவீதத்திற்கும் மேல் ஷூட்டிங் நடைபெறவுள்ளது. அதனால் 2026ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதியில் சேயோன் படம் வெளியாக வாய்ப்புகள் இல்லை. அதனால் இதை 2026ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிட ஒருபுறம் திட்டம் இருக்கிறதாம். 2026ம் ஆண்டு தீபாவளியில் பல பிரம்மாண்ட படங்களும் வெளியாகும் நிலையில், அதிலும் சிக்கல் உள்ளது. அதனால் 2027ம் ஆண்டு பொங்கலில் வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுவருகிறதாம்.

Follow Us